தடையை நீக்க முடிவு இந்தியப் பயணிகள் பிலிப்பைன்ஸ் செல்லலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 6, 2021

தடையை நீக்க முடிவு இந்தியப் பயணிகள் பிலிப்பைன்ஸ் செல்லலாம்

மணிலா, செப். 6- இந்தியாவில் கரோனா தொற்றின் 2ஆவது அலை மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியதால், இந்தியாவுடனான விமானப் போக்கு வரத்துக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்தன. தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக் கப்படுவதாக அறிவித்தன.

கரோனா தொற்றின் 2ஆவது அலை பரவல் காரணமாக இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோ னேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் அய்க்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ் அரசு தடை விதித்திருந்தது. சூழலுக்கு ஏற்ப இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 10 நாடுகள் மீதான பயண தடையை நீக்கி, பயணிகளை வரும் 6ஆம் தேதி முதல் அனுமதிக்க பிலிப்பைன்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலை பிலிப் பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே வழங்கி யுள்ளார்.

பிலிப்பைன்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20310 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையி லும், பயண தடையை நீக்க அரசு முடிவு செய்திருக் கிறது. எனினும்,  இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து வரும் பயணிகள், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment