காபூல், செப். 6- ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையி லான நேட்டோ படைகள் வெளி யேறத் தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே தலிபான் பயங்கரவாதி கள் முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசம் ஆக்கினர். கடந்த மாதம் 15ஆம் தேதி தலைநகர் காபூலை அவர்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
இதைத்தொடர்ந்து 20 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்த தலிபான்கள் தங்களது தலைமையில் நாட்டில் புதிய அரசு அமையும் என தெரிவித்தனர். தற் போது ஆப்க £னிஸ்தானிலிருந்து பன்னாட்டு படைகள் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில் புதிய அரசை அமைப்பதில் தலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதேவேளையில் ஆப்கானிஸ் தானில் மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங் களை தலிபான்கள் கைப்பற்றிய போதும் இந்துகுஷ் மலைத்தொட ருக்கு அருகில் உள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் அவர்க ளால் கைப்பற்ற முடியாத நிலை இருந்தது. சுமார் 2 லட்சம் பேர் வாழும் பஞ்ச்ஷீர் மாகாணம் நீண்ட காலமாகவே தலிபான்க ளுக்கு எதிராக போராடி வருகிறது. இந்த மாகாணம் இப்போது அல்ல எப்போதுமே ஆதிக்ககாரர்களிடம் அடிபணிந்தது இல்லை.
1980-களில் அரச படைகளுக்கு எதிராகவும் 1990-களில் தலிபான் களுக்கு எதிராகவும் பஞ்ச்ஷீர் மாகாண போராளிகள் சண்டையிட்டனர். அந்த வகையில் தற் போதும் ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபராக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டுள்ள துணை அதிபர் அமருல்லா சாலே தலைமையில் பஞ்ச்ஷீர் போராளி கள் தலிபான்களுடன் சண்டை யிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சண்டையில் தலிபான்கள் தரப்பில் 600 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பஞ்ச்ஷீர் போராளிகள் குழு அறிவித்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலி பான்கள் பிடிபட்டுள்ளனர் அல் லது சரண் அடைந்துள்ளதாகவும் போராளிகள் குழு தெரிவித்து உள்ளது.
அதேவேளையில், பஞ்ச்ஷீர் மாகாணத்தை கைப்பற்றும் முயற்சி தொடர்ந்து நடப்பதாக தலிபான்கள் வட்டாரம் தெரிவித் துள்ளது. தலைநகர் பசாரக் செல் லும் சாலையில் கண்ணிவெடிகள் அதிக அளவில் இருப்பதால், முன் னேறிச்செல்லும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தலிபான்கள் வட்டாரம் கூறியுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அய்.நா. திட்டம்
மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ் தானை விட்டு வெளியேற தொடங் கின. அதனைத் தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலிபான்கள் வசம் சென்றது. தலிபான்களின் ஆட் சிக்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ் தானில் குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட லட் சக்கணக்கான மக்கள் உணவு மற்றும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருவதாகவும், கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப் கானிஸ் தானைவிட்டு வெளி யேறியதை அடுத்து நிலைமை இன்னும் மோசமாகி விட்டது என்றும் அய்.நா. தெரிவித்துள்ளது.
இதையடுத்து அய்.நா. தலைவர் அன்டோனியோ கட்டரெஸ் உலக நாடுகளிடையே ஆப்கானிஸ் தானுக்கு நிதி திரட்ட ஓர் முக்கிய கூட்டத்தை நடத்த உள்ளார். டென்மார்க், கஜகஸ்தான், வடக்கு மாசிடோனியா, பாகிஸ்தான், போலாந்து, கத்தார், அய்க்கிய அரபு அமீரகம், அமெரிக்கா உள் ளிட்ட நாட்டு பிரதிநிதிகளுடன் அவர் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். பாதிக் கப்பட்ட மக்களுக்கு அய்.நா. விரை வில் உதவத் திட்டமிட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வன்முறை போராட்டத்தில் ஈடு பட்டதால் தலைநகர் காபூலில் இருந்த அய்நா., தூதரகம் தற்காலி கமாக மூடப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.


No comments:
Post a Comment