‘ராஷித் ரோவரை’ விரைவில் விண்ணில் ஏவ திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 6, 2021

‘ராஷித் ரோவரை’ விரைவில் விண்ணில் ஏவ திட்டம்

அமீரகம், செப். 6- அமீரக நிலவு பயண திட்டத்தில் உரு வாக்கப்பட்டு வரும் ராஷித் ரோவரை அடுத்த ஆண்டுக்குள் விண்ணில் ஏவ திட்டமிடப் பட்டு உள்ளதாக முகம்மது பின் ராஷித் விண்வெளி மய் யம் தகவல் வெளியிட்டு உள்ளது.

இது குறித்து நிலவு பயண திட்ட மேலாளர் டாக்டர் அமத் அல் மர்சூகி அளித்த பேட்டியில் கூறி யதாவது:-

அமீரகத்தின் சார்பில் துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மய் யத்தில் நிலவில் சென்று ஆராய்ச்சி செய்யும் ராஷித் ரோவர் வாகனம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த வாகனம் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் வரும் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் நிலவில் தரையிறங்கும் முதற்கட்ட பகுதியானது தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள நிலவின் நிலப்பரப்புக்கு லத்தீன் மொழியில்லாகஸ் சோம்னியோரம்என்று பெயரிடப்பட்டுள் ளது. இது லேக் ஆப் டிரீம்ஸ் என்ற ஆங்கில பெயரால் அழைக்கப்படு கிறது. இது நிலவின் முன் பகுதியில் அமைந்துள்ள இடமாகும். கரடு முர டாக இல்லாமல் இருப்ப தன் காரணமாக இந்த இடம் தேர்வு செய்யப் பட்டுள்ளது. ஒருவேளை இந்த பகுதியில் தரையிறங்க முடியாவிட்டால் மாற்று ஏற்பாடாக இன் னும் 3 இடங்கள் தேர்வு செய்து வைக்கப்பட்டு உள்ளது.

தற்போது மாதிரி ராஷித் ரோவர் வாகனத் தின் செயல்பாடுகளின் சோதனைகள் வெற்றிக ரமாக நிறைவடைந்துள் ளது. ஜப்பான் நாட்டின் அய் ஸ்பேஸ் நிறுவனம் சார்பில்ஹக்குட்டோ- ஆர்என்ற லேண்டர் வாகனம் உருவாக்கப் பட்டு வருகிறது. இந்த லேண்டர் வாகனம்தான் ராஷித் ரோவரை சுமந்து சென்று தரையிறக்குகி றது. அடுத்த ஆண்டில் (2022) ஆகஸ்டு மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் அமெரிக்கா வின் புளோரிடா மாகா ணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மய்யத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ்- பால்கன் 9 என்ற ராக் கெட் மூலம் ரோஷித் ரோவர் லேண்டர் விண் ணுக்கு அனுப்பப்பட உள் ளது. இதில் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் ராஷித் ரோவர் 3 மாதங் கள் விண்ணில் பயணம் செய்து நிலவை அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment