தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மேலும் கால அவகாசம் தேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 5, 2021

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மேலும் கால அவகாசம் தேவை

உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு!

 புதுடில்லி,செப்.5- தமிழ்நாட்டில் உள் ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மேலும் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதுசெப்.15-க்குள் தேர் தலை நடத்தி முடிக்க உத்தர விட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

அவ காசத்தை நீட்டிக்க கோரி புதிய இடைக் கால மனுவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே இரு முறை அவகாசம் கோரியிருந்த நிலையில் தற்போது 3ஆவது முறையாக கூடுதல் கால அவ காசம் கோரி கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், அண்மையில் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் அவற்றின் தாய் மாவட் டங்கள் என 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக தெரி விக்கப்பட்டிருந்தது.

அதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இதனைத்தொடர்ந்து புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங் களுக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த 6 மாத கால அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ் நாட்டில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில், அவகாசத்தை நீட்டிக்கக் கோரி புதிய இடைக்கால மனுவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யம் மனு தாக்கல் செய்துள்ளது.

No comments:

Post a Comment