* கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் (384 கி.மு. 322 கி.மு.) எல்லா உயிரினங்களையும், தாவரங்கள் (நிலைத்திணை), விலங்குகள் (நகர் திணை) என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்தார்.
* 18 ஆம் நூற்றாண்டில் லின்னேயசின் முறைப்படி(Linnaeus’ system), இவை வெஜிட்டபிலியா (Vegetabilia), அனிமலியா (Animalia) என்னும் இரண்டு இராட்சியங்கள் (Kingdoms) ஆகின. வெஜிட்டபிலியா பின்னர் பிளாண்ட்டே (Plantae) என அழைக்கப்பட்டது.
* காலப்போக்கில் பிளாண்ட்டே ஆரம்பத்தில் அடக்கப்பட்ட பல வகைகள் தொடர்பற்றவையாக இருப்பது அறியப்பட்டது. பூஞ்ஜைகள், பல வகை பாசிகளும் வெவ்வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டன. இருந்தாலும் இவை பல சூழ்நிலைகளில், தாவரங்களாகவே இன்றளவும் கருதப்பட்டு வருகின்றன.
* தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப் பட்டினம் என்னும் ஊரில் கடற்கரை அருகில் அமைந்துள்ள ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட “பவோபாப் மரம்“ இன்றும் ஆயிரம் ஆண்டுகளை கடந்து வாழ்ந்துகொண்டு இருக்கிறது
No comments:
Post a Comment