மனிதர்களின் உடல் நிலை காலத்திற்கு ஏற்றாற் போல் உருமாற்றம் அடைந்த ஒன்று ஆகும்.
கண்களை எடுத்துக்கொள்ளுங்கள் - இயற்கையான மரபணு குறைபாடு சில விபத்துகளைத் தவிர மற்ற கண்பார்வை மங்குவது போன்றவை ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளின் குறைபாடுகளால் தான்(வைட்டமின் குறைபாடு) அக்குறைபாடு நமது உணவு மாற்றத்தால் ஏற்படுகிறது,
சிறுவயதில் பார்வை குறைபாடு அதாவது மரபணு மற்றும் சில விபத்துக்களைத் தவிர பார்வைக் குறைபாடு ஏற்பட்டால், மருத்துவரிடமும் ஆலோசனை பெறுவதோடு உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வாருங்கள்.
கேரட் ஜூஸ்களை தேனீர் காபிக்கு பதிலாக கொடுத்துப் பழங்குங்கள், நுங்கு, பால், வாழைப்பழம், கீரைவகைகள் உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பார்வைக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கொழுப்பு உணவுகளை கொடுப்பதை கட்டாயம் தவிர்க்கவும்
அப்படி சேர்க்கும் போது மாதக்காலண்டரில் அல்லது நாட்குறிப்பில் குழந்தைகளுடைய பார்வை குறித்த மாற்றத்தை குறித்து வைத்துக் கொண்டு வாருங்கள். நல்ல மாற்றம் தென்படும்.
கண்ணாடிகளை மாட்டும் போது நாளடைவில் விழி கண்ணாடியின் பவருக்கு ஏற்றவாறு தனது லென்சை மாற்றிக்கொள்ளும்,. இப்படி மாற்றம் அடையும் போது பார்வைத்திறன் நன்றாக ஆன பிறகும் கண்ணாடி இல்லாமல் படிக்க முடியாது போய்விடும்.
விளைவு, காலம் முழுவதும் கண்ணாடிகள் அணியவேண்டிய நிலை உருவாகிவிடும்.
கிட்டத்தட்ட கண்ணாடியும் கண்களுக்கு போடும் விலங்கு மாதிரிதான்.
முடிந்தவரை குழந்தைகளுக்கு எடுத்த உடனே கண்ணாடிகளை வாங்கிக்கொடுக்கமால் அரசு சித்த மருத்துவமனை மருத்துவர்களிடமும் ஆலோசனை பெற்று ஊட்டச்சத்து உணவின் மூலம் பார்வைக்குறைபாட்டை நீக்க முயற்சி செய்யலாம்.

No comments:
Post a Comment