சென்னை, செப்.5 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- திருமணம், பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் தாய், தந்தையின் பெயரைக் குறிப்பிடும் நிலையில் அரசு ஆவணங்கள், வங்கி, கல்வி சம்பந்தமான ஆவணங்கள், இருப்பிட சான்று, ஜாதி சான்று, வருமான சான்று போன்றவற்றை பெறுவதற்கான விண்ணப்பங்களில் தந்தை பெயர் மட்டுமே குறிப்பிடப்படுகிறது.
இந்திய அரசமைப்பு சட்டம் ஆண், பெண் இருபாலருக்கும் சமஉரிமை வழங்கியுள்ளநிலையில், சமீபத்தில் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களில் தாயாரின் பெயர் கேட்கப்படவில்லை. நாட்டை தாய்நாடு என்றும், மொழியை தாய்மொழி என்றும், நதியை பெண்கள் பெயரிலும் அழைக்கும் சூழலில் அனைத்து அரசு துறை ஆவணங்கள், விண்ணப்பங்கள், சான்றிதழ்களில் தாயாரின் பெயரைக் குறிப்பிடும் வகையில் உரிய திருத்தம் கொண்டுவர உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை (6.9.2021) விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment