திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 5, 2021

திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு

சென்னை, செப்.5 திமுக சார்பில் முப்பெரும் விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது  செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டும், செப்டம்பர் 16 திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும், செப்டம்பர் 17 தந்தை பெரியாரின் பிறந்த நாளையும் சேர்த்து முப்பெரும் விழா திமுகவினரால் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், பொதுக் கூட்டமும் நடைபெறும். அத்துடன் முப்பெரும் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திமுக முப் பெரும் விழாவை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

பெரியார் விருது  - மிசா.பி.மதிவாணன்

அண்ணா விருது - எல்.மூக்கையா

கலைஞர் விருது  - கும்மிடிப்பூண்டி கி.வேணு

பாவேந்தர் விருது  - வாசுகி ரமணன்

பேராசிரியர் விருது  - பா.மு.முபாரக்

ஆகியோர் விருதுகள் பெறுவதாக திமுக சார்பில் நேற்று (4.9.2021) அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment