அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
சென்னை, செப்.6 தமிழ் நாட்டில் புதிதாக துலுக்கர் பட்டி, வெம்பக்கோட்டை, பெரும்பாலை ஆகிய 3 இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கெள்ளப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 4.9.2021 அன்று கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறை மானியக் கோ ரிக்கை மீதான உறுப் பினர்களின் விவாதங்களுக்கு பதில் அளித்து, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
75-ஆவது சுதந்திரத் திரு நாளைக் கெண்டாடும் வகை யிலும், நாட்டுப்புறக் கலை ஞர்களுக்கு உதவும் நோக் கிலும், தமிழ்நாட்டின் நாட் டுப்புறக் கலைகளை 75 காட் சிப் பதிவுகளாக தயாரித்து, இணையவழியில் வெளியிட ரூ.1.64 கோடி ஒதுக்கப்படும். தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகள் இடம்பெறும் வகை யில், தமிழர் திரு நாளான பொங்கலன்று ஆண்டுதோ றும் சென்னையில் பிரம் மாண்ட கலைவிழா (இணை யவழி மூலமும்) நடத்தப்படும்.
இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிக் கொணர ஆண்டுதோறும் மாவட்ட, மாநில அளவில் கலைப் போட்டிகள், இளை யோருக்கான மாநிலக் கலை விழா நடத்தப்படும்.
கலைமாமணி விருது பெற்ற, வறுமை நிலையில் வாழும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் ஒருமுறை வழங்கப்படும் பொற்கிழித் தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள 90-க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் ஆவணப்படுத்தப் படும். தற்போது நடைபெற்று வரும் கீழடி, சிவகளை, மயி லாடும்பாறை, கங்கை கொண்ட சோழபுரம் அக ழாய்வுகளுடன், புதிதாக திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை, தருமபுரி மாவட் டம் பெரும்பாலை ஆகிய 3 இடங்களையும் சேர்த்து மொத்தம் 7 இடங்களில் அறிவியல் அடிப்படையில், அகழாய்வுகள் மேற்கொள் ளப்படும். இவைதவிர, புதிய கற்கால இடங்களைக் கண்டறிதல்,தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள தொல் லியல் இடங்களை இனங் காணுதல் என்னும் இரண்டு அறிவியல் முறையிலான கள ஆய்வுகளும் மேற்கொள்ளப் படும்.
மதுரை மாவட்டம் முத லைக்குளம், அரிட்டாப் பட்டி, சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் தொண்டூர், நெக னூர்பட்டி ஆகிய 5 இடங் களில் உள்ள பண்டைய தமிழ்க் கல்வெட்டுகள், பாது காக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

No comments:
Post a Comment