பெங்களூரு, செப்.6 கருநாடகத்தில் அனைத்துவிதமான இணைய சூதாட் டங்களுக்கும் தடை விதிப்பது என்றும், அதுதொடர்பான மசோதா சட்டசபை பேரவையில் தாக்கல் செய்வது என்றும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு விதானசவுதாவில் முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை தலை மையில் 4.9.2021 அன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அமைச்சரவை கூட்டம்
இந்த கூட்டத்தில் மாநிலத்தில் கரோனா 3-ஆவது அலை விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்திருப்பதால், அதற்காக எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவ டிக்கைகள் குறித்து விரிவாக ஆலோ சிக்கப்பட்டது. 3-ஆவது அலையை எதிர்கொள்ள தேவையான மருந்துகள், பிற மருத்துவ உபகரணங்கள் வாங்குவ தற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.குறிப்பாக மாநிலத்தில் தற்போது இணையம் மூலமாக நடைபெறும் சூதாட்டங்களால் சிறுவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக முதல மைச்சர் பசவராஜ் பொம்மை, அமைச்சர் களிடம் விரிவாக ஆலோசித்தார். பின்னர் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிப்பது என்று அமைச்சரவை கூட் டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment