உணவு முறையும் குழந்தைகளின் எதிர்காலமும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

உணவு முறையும் குழந்தைகளின் எதிர்காலமும்

நமது நாடு பெரும்பாலும் நடுத்தரமக்களைக் கொண்ட நாடுஇங்கு  “ரிச் புட்என்று ஆங்கிலத்தில் கூறப்படும் விலை உயர்ந்த பருப்புகள் இதர உலர்பழங்கள் கிட்டத்தட்ட 20 விழுக்காடு குடும்பங்கள் தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்க்கும் ஒன்றாகும். இதர குடும்பங்கள் பெரும்பாலும் விழாக்காலங்களில் கிடைக்கும் பண்டங்களில் தான் பார்த்திருப்பார்கள்.

 வெறும் 8 விழுக்காடு மக்கள் மட்டுமே தங்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு விலை உயர்ந்த உலர்பழங்கள் மற்றும் பருப்புகளை வாங்கிச் சாப்பிடும் திறன் பெற்றுள்ளனர்.

 அவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு அந்த உணவு மூலம் மூளைவளர்ச்சிக்குத் தேவையான புரதம் எளிதாக கிடைத்துவிடுகிறது,

அப்படி என்றால் இதர மக்கள் அனைவருமே மூளைவளர்ச்சிக்குத் தேவையான புரதம் கிடைக்காதவர்களா என்று நாம் கேட்கமுடியும்?

 உறுதியாக கூறுவேன் ஆம்?

கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான நடுத்தரவர்க்கம் தங்கள் குழந்தைகளுக்கு வெறும் கார்போஹைட்ரேட் மற்றும் உடலில் கொழுப்பாகச்சேரும் செயற்கை வேதிப்பொருட்கள் கலந்த உணவுகளையே கொடுத்துவருகிறோம்

உலர் இறைச்சி, கருவாடு

இன்று 30 வயது தாண்டியவர்கள் தங்களின் மாணவப்பருவ உணவுமுறையை, இன்றைய உணவு முறையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்

அன்று வீடுகளில் கருவாடு, இறைச்சி, மீன் போன்றவை பொதுவான ஒரு உணவுப் பொருளாக இருந்தது, சிறு நகரங்களில் கிராமங்களில் ஓலைப்பெட்டிகளில் கருவாடு கொண்டு வருவார்கள். கிட்டத்தட்ட பல குடும்பங்களில் தினசரி கூட கருவாடு உணவாக இருந்தது, இன்று கூட நகர்ப்புறங்களில் உள்ள பெட்டிக்கடைகளில்  கருவாடுகள் சிறிய பாக்கெட்டுகளில் விற்கும் பொருளாக உள்ளது, 

கிராமங்களில் உப்பு போட்டு காயவைக்கப்பட்ட இறைச்சி சாதாரணமாக கிடைத்தது, இன்று வெளியே சொன்னால்பிரஸ்டீஜ்கெட்டுவிடும் என்று நினைக்கும்,  பெரிய அலுவலகங்களில் உயர்பதவிகளில் அமர்ந்துகொண்டு  நாங்கள் எல்லாம் நான்வெஜ் தொட்டுக் கூட பார்க்கமாட்டோம் என்று கூறும் நபர்கள், *பள்ளிகளுக்குச் செல்லும் போது பானையில் உள்ள காய்ந்த இறைச்சியை டவுசர் பையில் போட்டுக்கொண்டு சென்றவர்கள் தான்.

ஆனால் 90-களுக்குப் பிறகு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் சாலை ஓர சுகாதாரமில்லாத வெறும் வயிற்றை மட்டுமே நிரப்பும் உணவு வகைகளுக்கு 60 விழுக்காடு இந்திய நடுத்தரமக்கள் மாறிவிட்டனர். இதனால் தான் மருத்துவமனைகளில் பெருங்கூட்டம் கடந்த சில ஆண்டுகளாக காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் புரிந்துகொள்ளும் திறன் அதிகம் பாதிக்கப் பட்டுவருகிறது, வெறும் மதிப்பெண் பெறும் செயற்கை கருவிகளாக நம் பிள்ளைகள் மாறிக்கொண்டு வருகின்றனர்.  இது நடுத்தரகுடும்பங்களில் மட்டுமே நடைபெறுகிறது என்பதைக் கவனிக்கவும்

கீழை நாடுகளைக் கவனியுங்கள் - எடுத்துக்காட்டாக தாய்லாந்து, தைவான், சீனா, கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் மீன் மற்றும் இறைச்சி உணவுகளை சிற்றுண்டிகளாகவும் பயன்படுத்துகின்றனர். குழந்தைகளுக்கு உலர்மீன்கள் சிற்றுண்டிகளாக கொடுக்கப் படுகிறது, ஆகையால் தான் அக்குழந்தைகள் விளையாட்டு கல்விகளில் சிறந்துவிளங்குகின்றனர்.

 ஊரார் கூறுவதை எல்லாம் நாம் கேட்கவேண்டிய தேவையும் இல்லை. இதர தேவையற்ற பொருளற்ற கட்டுக்கதைகளுக்கெல்லாம் அடிமையாக இறைச்சி உணவுகளை குழந்தைகளிடமிருந்து விலக்கி வைக்காதீர்கள்

இறைச்சி உணவு சிற்றுண்டி என்பது கிட்டத்தட்ட நம்மிடையே இல்லாமலேயே போனது. அந்த இடத்தை கடைகளில் கிடைக்கும் எண்ணெயில் வறுத்த இறைச்சி உணவுகள் பிடித்துவிட்டன. இது மிகவும் ஆபத்தானது.

 ஆகவே நாம் மீண்டும் நமது குழந்தைப்பருவ உணவுமுறைகளுக்கு மாறவேண்டும்,

 நமது குழந்தைகள் நமக்கான வர்கள் மட்டுமல்ல, எதிர்கால தமிழ்நாட்டுச்செல்வங்கள் என்பதையும் கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுத்து அவர்களை திறமையானவர்களாக மாற்றுங்கள்.

No comments:

Post a Comment