தலிபான்களுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும்: அம்ருல்லா சலே அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 5, 2021

தலிபான்களுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும்: அம்ருல்லா சலே அறிவிப்பு

காபூல், செப். 5- ஆப்கன் முன்னாள் துணை அதிபரும், பஞ்ஷிர் பள்ளத் தாக்கின் போராளிக் குழுத் தலை வருமான அம்ருல்லா சலே தப்பி யோடி விட்டதாக தலிபான்கள் தெரிவித்த நிலையில் ‘‘எங்கள் எதிர்ப்பு தொடர்கிறது, நான் என் மண்ணில் தான் இருக்கிறேன், என் மண்ணின் கவுரவத்தை காக்க தொடர்ந்து போராடுவேன்‘‘ என்று அம்ருல்லா சலேட்வீட்' செய்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள பஞ்ஷிர் பள்ளத்தாக்கு போராளிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1990களில் தலிபான்கள் ஆதிக்க சக்தியாக இருந்தபோது பஞ்ஷிரை அவர்களால் நெருங்க இயல வில்லை. சோவியத் படைகள் கூட அப்பகுதியை நெருங்க முடியாத அரணாக அகமது ஷா மசூத் வைத் திருந்தார்.

ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே தலிபான் களை நீண்ட காலமாக எதிர்த்து வருபவர். 1990களில் இளம் வயதில் இருந்தபோதே அவர் தனது பெற்றோரை இழந்தார். அப்போது முதல் அவர் மசூதுடன் இணைந்து தலிபான்கள் எதிர்ப்புப் போராட் டத்தில் பங்கேற்று வருகிறார்.

1996இல் தலிபான்கள் ஆப்க னைக் கைப்பற்றியபோது அவர் அங்கிருந்து தப்பினார். தலிபான் கள் அவரது சகோதரியைக் கைது செய்து துன்புறுத்திக் கொலை செய்தனர்.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தா னில் இருந்து அமெரிக்கப் படை கள் வெளியேறிய நிலையில் அந் நாட்டின் பெரும்பாலான பகுதி தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால் பஞ்ஷிர் பகுதி மட்டும் தலிபான்களை எதிர்த்து போராடி வருகிறது.

தலிபான்களுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டேன், புதிய போருக்கு தயாராக இருக்கிறேன் என்று அம்ருல்லா சாலே தெரிவித் திருந்தார். அதன்படியே, பஞ்ஷிர் மாகா ணத்தில் தற்போது தலிபான்களுக்கு எதிராக போராடி வருகிறார்.

இந்தநிலையில் பஞ்ஷிர் பகு தியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். அம்ருல்லா சலே தப்பியோடி விட்டதாக தலி பான்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் அம்ருல்லா சலே தனது மண்ணிலேயே இருப்ப தாகவும் எங்கும் தப்பியோட வில்லை என்றும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள சுட்டுரைப் பதிவில் கூறியுள் ளதாவது: ‘‘தலிபான்களுக்கு எதி ரான எங்கள் எதிர்ப்பு தொடர்கி றது. நான் இங்கே என் மண்ணில் தான் இருக்கிறேன். என் மண் ணுக்காகவும் அதன் கவுரவத்தை பாதுகாக் கவும் தொடர்ந்து போராடுவேன்’’ என்று அம்ருல்லா சலே தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில் அவர் கூறு கையில் ‘‘பஞ்ஷீர் பகுதிக்கு பொருட் கள் வருவதை தலிபான்கள் மனி தாபிமானமின்றி தடுத்துள்ளனர். இங்கு மக்கள் வருவதையும் தடுக் கிறார்கள். எங்களுடைய வயல் வெளிகளில் நடந்து செல்லும் பஞ்ஷீர் ஆண்கள் துன்பப்படுத்தப்படு கின்றனர் எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment