தஞ்சையில் உள்ள குடும்ப விளக்கு நலநிதியின் சார்பில் ரூ.2 லட்சத்தை (காசோலை) வழக்குரைஞர் சி.அமர்சிங் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
திராவிடன் நிதியின் சார்பில் ரூ.2 லட்சத்தை (காசோலை) பொருளாளர் வீ.குமரேசன் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
சேலம் பழநி.புள்ளையண்ணன் தமது குடும்பத்தின் சார்பில் ரூ.1 லட்சத்தை (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
குன்னூர் மருத்துவர் கவுதமன் ரூ.1 லட்சத்தை (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
பொறியாளர் வீ.சுந்தரராஜூலு ரூ.50 ஆயிரத்தை (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாளையொட்டி திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை இணைந்து நடத்திய பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக இயக்க இதழ்களான விடுதலை, உண்மை பெரியார் பிஞ்சு, திராவிட பொழில் வழங்குவதற்காக சந்தாத் தொகை ரூ.7,720அய் ச.இன்பக்கனி, க.பார்வதி, கு.வெற்றிச்செல்வி ஆகியோர் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
பேராவூரணி சிதம்பரத்தின் 51ஆம் ஆண்டு (30.9.2021) பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். வழக்குரைஞர் சி.அமர்சிங் தஞ்சை பார் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்றதை தொடர்ந்து தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். மயிலை நா.கிருஷ்ணன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். திண்டிவனம் தாஸ் உடல்நலம் குறித்து தமிழர் தலைவர் விசாரித்தார்.
No comments:
Post a Comment