தமிழ்நாட்டில் கூடுதலாக 11 மருத்துவக் கல்லூரிகள்: சுகாதாரத்துறை தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 6, 2021

தமிழ்நாட்டில் கூடுதலாக 11 மருத்துவக் கல்லூரிகள்: சுகாதாரத்துறை தகவல்

சென்னை, அக். 6- தமிழ்நாட் டில் கூடுதலாக 11 மருத்து வக் கல்லூரிகள் வர வாய்ப்பிருப்பதால், எம்.பி.பி.எஸ். இடங்க ளின் எண்ணிக்கை அதி கரிக்கும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 25 அரசு மருத்துவக் கல் லூரிகளில் மொத்தமாக 3,550 எம்.பி.பி.எஸ். இடங் கள் உள்ளன. மேலும் கூடுதலாக 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப் பட உள்ளன. இதன் மூலம் 1,650 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரித்துள் ளன. இதனால் அரசு மருத்துவக் கல்லூரிகள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 4,506 ஆக உள்ளது.

ஏற்கெனவே உள்ள 17 தனியார் மருத்துவக் கல் லூரிகள் மூலம் மொத்தம் 2,475 இடங்கள் உள்ள நிலையில், புதிதாக வரும் 4 தனியார் கல்லூரிகள் மூலம் 600 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைக்க உள்ளன. தனி யார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1,723 ஆக இருப்பதால் மொத்த இடங்களின் எண்ணிக்கை 6,229 ஆக இருக்கும் என சுகாதா ரத்துறை கணித்துள்ளது.

பி.டி.எஸ். படிப்பை பொறுத்தவரை 2 அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் 194 இடங்களும், 17 தனியார் கல்லூரிகள் மூலம் 1,125 இடங்களும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் என சுகாதா ரத்துறை தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment