தகவல் அறியும் உரிமை சட்டத்தை சட்டையே செய்யாத ஒரு நிதியம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 6, 2021

தகவல் அறியும் உரிமை சட்டத்தை சட்டையே செய்யாத ஒரு நிதியம்!

எம். சிறீதர் ஆசாரியுலு

(நெருக்கடி காலங்களில் பொது மக்களுக்கு நிவா ரண உதவி அளிக்கும் "பிரதமர் கவலைப்படுகிறார் நிதியம்" (PM CARES (Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations  Fund) பொது அதிகாரம் பெற்ற ஒன்றல்ல என்று அரசு கூறு வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது முட்டாள் தனமானதே அன்றி வேறல்ல.)

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்விகளும் தகவல்களும் கேட்கப்படும்போதெல்லாம் பிரதமர் அலுவலகம் அந்த விடயங்களைப் பற்றி திரை போட்டு மறைக்கிறது என்று கூறுவது ஒன்றும் மிகைப் படுத்திக் கூறப்படுவதல்ல. பிரதமர் பொதுமக்களைப் பற்றி அக்கறை எடுத்துக் கொண்டு கவலைப்படுகிறார்  என்பதையே  தனது பெயராக சுருக்கு எழுத்துக்களில் கொண்ட இந்த நிதியம் உருவாக்கப்பட்டபோதே,  அது ஒரு பொது அதிகார அமைப்பின் சட்டப்படியான கடமைகளை மதிக்காமல் மீறிச் செல்வதாகவே  இருந்தது  என்பதையே காட்டுவதாக இருந்தது.

மற்ற நிதியங்கள்

ஒரு புதிய, முரண்பாடுகள் நிறைந்த, எவருக்கும், எதற்கும் பதில் சொல்லத் தேவையில்லாத  இந்த PM CARES Fund  உருவாக்கப்பட்டபோதே, 2005 ஆம் ஆண்டு பேரிடர் நிவாரண மேலாண்மை சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட  தேசிய பேரிடர் நிவாரண நிதியம் (National Disaster Response Fund -NDRF) என்ற அமைப்பு வேண்டுமென்றே அலட்சியப்படுத்தப் பட்டுவிட்டது.  ஒரு பொது அதிகார அமைப்பு என்ற முறையில் இந்த NDRF அமைப்பு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், தகவல்களை அளிக்கவும்   சட்டப்படி கடமைப்பட்டுள்ளது என்பதுடன் இந்தியா வின் பொதுத் தணிக்கையாளர் மற்றும் கட்டுப்பாட்டாள ரால் (Comptroller and Auditor General of India)   தணிக்கை செய்யப்பட வேண்டியதாகவும் இருக்கிறது. விசாரணை செய்து சட்டப்படி தகவல் பெறும் சட்ட விதிகள் தங்களுக்கு சங்கடத்தைத் தரும் தடை களாகவே ஒன்றியஅரசு கருதுவதாகத் தெரிகிறது. தேசிய அளவில் மட்டுமல்லாது, மாநிலங்கள் மற்றும் மாவட்ட அளவுகளிலும் கூட பேரிடர் நிவாரண நிதியங்களை இந்த தேசிய பேரிடர் சட்டம்   (National Disaster  Act  )  உருவாக்கியதுடன், உள்ளூர் அளவில் சட்டப்படியான வெளிப்படைத் தன்மையுடனும், தணிக்கை செய்யப்பட வேண்டும்  என்ற விதி களுடனும், நன்கொடைகளைப் பெற்று தங்கள் பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள இந்த  National Disaster  Act  வகை செய்துள்ளது, ஆனால் இந்த PM CARES   நிதியம் நன்கொடைகள் வசூலிப்பதையும், அவற்றைப் பயன் படுத்துவதையும்  நாட்டின் மய்யச் செயலாக ஆக்கி யிருப்பது, இந்தியாவின் கூட்டாட்சித் தன்மைக்கு எதிரானதாக இருப்பது மட்டுமன்றி, நடைமுறையில் செயல்படுவதை முற்றிலும்  சவுகரியமற்றதாகவும் ஆக்கிவிடுகிறது.

ஜவஹர்லால் நேருவின் நாட்களில் இருந்தே பிரதமரின் தேசிய நிவாரண நிதியம் செயல்பட்டு வந்துள்ளது. அதன் இணையதளம் கூறுவதாவது:  1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு விடுத்த ஒரு வேண்டுகோளின்படி, பாகிஸ்தானில் இருந்து குடி பெயர்ந்த மக்களுக்கு உதவி செய்வதற்கான பிரதமர் தேசிய நிவாரண நிதி Prime Minister’s National Relief Fund உருவாக்கப்பட்டது. இந்த நிதியத்தின் நிதி இயற்கைப் பேரிடரில் கொல்லப்பட்டவர்கள்,  பெரும் விபத்துகளில் மற்றும் கலவரங்களில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு,  நிவாரணம் அளிப்பதற்கு முக்கிய மாகப் பயன்படுத்தப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளுக்கும் இந்த நிதியத்தின் ஒரு பகுதியினால் அளிக்கப் பட்டு வந்துள்ளது. வருமான வரி சட்டத்தின் கீழ் ஒரு அறக்கட்டளையான இந்த நிதியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இந்த நிதியம் பிரதம அமைச்சராலோ அல்லது தேசிய காரணங்களுக்காக அனுப்பப்பட்ட பிரதிநிதிகளாலோ  நிர்வகிக்கப்படும்.  இந்த Prime Minister’s National Relief Fund நிதியத்தில் ஒரு பெருந்தொகை இன்னமும் செலவிடப்படாமல் அப்படியே உள்ளது என்பதுதான் உண்மை. ஆனால், நரேந்திர மோடியின் அரசு அதனை எடுத்துப் பயன் படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இந்த நிதியத்துக்கு இந்திய குடியரசுத் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் கூட அறங்காவலர்களாக உள்ளனர். அதனை மற்றொரு தடையாக கருதிய   ஒன்றிய அரசு இப்போது  பிரதமர் மற்றும் அவரது அமைச்சர்கள் மட்டுமே கொண்ட ஒரு புதிய நிதியத்தை  உருவாக்கி உள்ளது.

National Disaster Relief Fund ñŸÁ‹ Prime Minister’s National Relief Fund இரு நிதியங்களின் நிதிகளுமே பயன்படுத்திக் கொள்ளப்படாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. PM CARES நிதியம் மட்டுமே வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஆனால் இந்த நிதியம் சட்டப்படியோ அல்லது அறிவிப்பின் மூலமாகவோ உருவாக்கப்படவில்லை.  ஒரு கணினி இணைய தளத்தை உருவாக் கியதன் மூலமாகவே இந்த PM CARES  நிதியம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உருவாக்கப்பட்டு கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக நன்கொடைகள் வசூலிப்பது தொடங்கப்பட்டது. அந்த இணைய தளத்தில் இந்த நிதியத்தின் கட்டமைப்பு, செயல்பாடுகள் மற்றும் கடமைகள் ஒரு யதேச் சதிகாரமான முறையில் வெளியிடப்பட்டுள்ளன. நன்கொடைகள் கோரும் பிரதமரின்அதிகார பூர்வமான வேண்டுகோள்கள், சாரநாத் சிங்கங்களின் தேசிய இலச்சினைக்குக் கீழேயும், வாய்மையே வெல்லும் என்ற சத்யமேவ ஜெயதே என்ற பொன்மொழியின் கீழேயும் விடப்பட்டுள்ளன. அதனால்,  டில்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் அரசு பதிவு செய்துள்ள ஒரு பிரமாணப் பத்திரத்தில்,  PM CARES   நிதியம் இந்திய அரசின் ஒரு நிதியம் அல்ல என்றும்,  அதனால் வசூலிக்கப்படும் நிதி எல்லாம் இந்திய அரசின் பொது நிதிக்குச் (Consolidated Fund of India)  செல்லாது என்றும்   கூறியிருப்பது  வியப்பளிப்பதாக இருக்கிறது. இந்த பிரமாணப் பத்திரம் பிரதமர்அலுவலகத்தின் ஒரு உதவி செயலாளரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை வெளிப்படைத் தன்மையுடன் செயல் படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிதியத் தின் மீது அரசுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை என்பதால் இந்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டி ருப்பது பச்சைப் பொய்யே என்று தெரிகிறது.

கேள்வியும் பதிலும்

தொடக்கத்தில் மறுத்த ஒன்றிய அரசு, இந்த நிதியம் ஒரு தர்ம அறக்கட்டளை என்று பின்னர் ஒப்புக் கொண்டது. ஆனால் அது ஒரு பொது அதிகாரம் பெற்ற ஓர் அமைப்பு என்பதை இன்னமும் ஒன்றிய அரசு ஒப்புக் கொள்ள மறுக்கிறது. தான் ஆற்றும் உரைகளில் எல்லாம் வெளிப்படைத் தன்மையுடன் தனது அரசு செயல்படுவது  பற்றி பிரதமர் மோடி அடிக்கடி பேசி வருகிறார். லஞ்ச ஊழல்களை பா... பொறுத்துக் கொள்ளாது என்று தங்களின் தேர்தல் அறிக்கையிலேயே உறுதிமொழி அளித்திருப்பதாக அக் கட்சியினர் கூறி வருகின்றனர். இவை எல்லாம் உண்மை என்றால், பிரதமர் இந்த நிதியத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உள்ள ஒரு பொது அதிகாரம் கொண்ட அமைப்பு என்று உடனடியாக அறிவிக்க வேண்டும். அத்துடன் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த நிதியம் பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களையும், தகவல்களையும் உடனடியாக அளிக்க வேண்டும் என்று உத்தர விடவேண்டும்.

PM CARES   நிதியம் சார்பில் பதிவு செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் உதவி செயலாளர் அளித்துள்ள பதிலில், வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட முடியாது என்ற வீம்பு பிடிக்கும் தன்மையும்,  தகவல் அறியும் சட்டத்தின் படி செயல்பட மறுக்கும் பிடிவாதமும்தான் தெரிகிறது. அரசமைப்பு சட்ட 12 ஆவது பிரிவின் கீழ் PM CARES  நிதியம் ஓர் அரசின் நிதியம் என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரி சாமியக் கங்காவால் என்ற வழக்குரைஞர் தாக்கல் செய்த ஒரு மனுவில் இருந்து இந்த பிரச்சினை தொடங்கியுள்ளது. மேலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 2 (h) பிரிவின்படி இந்த நிதியம் பொது அதிகாரம் கொண்ட அரசு அமைப்பு என்று அறிவிக்கப்பட வேண்டும் என்றும் மற்றொரு மனுவில் அந்த வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில் உள்ள குறிப்பு என்னவென்றால், பிரதமர் அலுவலகம்தான் இந்த நிதியைக் கையாள்கிறது என்றாலும் இந்த நிதியம் ஒரு பொது அதிகாரம் பெற்ற அரசு அமைப்பு அல்ல என்பதால் அது பற்றி எந்த ஒரு தகவலையும் அளிக்க பிரதமர் அலுவலகம் மறுக்கிறது என்பதுதான்.  பிரதமர் அலுவலகம் ஒரு பொது அதிகாரம் பெற்ற அமைப்பு என்பதால்,  அந்த நிதியம் பற்றிய கேள்விகளுக்கான பதில்களையும், தகவல்களையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளது என்ற உண்மையை  பிரதமர் அலுவலகம் முழுமையாக மறுத்து மறைக்கிறது.

மேலும் மேலும் கேட்கப்படும் கேள்விகளும் ஏற்படும் இடைவெளிகளும்

பிரதமர் அலுவலக உதவி செயலாளர் உச்சநீதி மன்றத்தில் பதிவு செய்த பிரமாணப் பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்கள் : இந்த PM CARES  நிதியம் இந்திய அரசமைப்பு சட்டத்தினா லேயோ அல்லது வேறு எந்த ஒரு சட்டத்தினாலேயோ உருவாக்கப்பட்டது அல்ல. அப்படி இருக்கும் போது, எந்த அதிகாரத்தின் கீழ் அது பிரதமரின் பதவிப் பெயரையும், நிர்ணயிக்கப்பட்ட தேசத்தின் (சிங்க) முத்திரைகளையும், தேசிய அடையாளமான மூவண் ணத்தையும்,  பிரதமர் அலுவலகத்தின் அதிகார பூர்வமான இணைய தளத்தையும் பயன்படுத்தி, ஓர் அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்து வரிச் சலுகைகளை அளித்துள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு அது உதவும் என்பதால்,இந்த நிதியத்திற்கு நன்கொடைகள் வழங்கும்படி பிரதமர் ஏன் வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். “PM CARESநிதியம் பற்றிய இணையதளம் இதனை மிகவும் தெளிவானதாக ஆக்குகிறது.

இந்த நிதியத்தினால் பெறப்படும் பணம் இந்தியாவின் பொது நிதியத்துக்கு (Consolidated Fund of India) செல்வதில்லை. அவ்வாறு அது பொது நிதியத்துக்கு செல்வதாக இருந்தால், இந்தியாவின் கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலினால்  (Comptroller and Auditor General of India)   இந்த நிதிய கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு இருக்கக் கூடும். இந்த நிதியத்தின் கணக்குகள் இவ்வாறு தணிக்கையிடப்படவில்லை என்ற காரணத்தால், அந்த கணக்குகள் நேர்மையாகப் பராமரிக்கப்படுவதை அரசு உறுதிப்படுத்திக் கொள்வதோடு, எந்த விதமான ஊழலும் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் வேண்டும். இந்த நிதியத்துக்கு பணம் வந்த வழிகளும், இதிலிருந்து செலவு செய்வதற்கு நிதி வினியோகம் செய்வதும் வெளிப்படைத் தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும்.

அந்த பிரமாணத்தில் உள்ள மூன்றாவது விஷயம்: ஒன்றிய அரசினாலோ, எந்த ஒரு மாநில அரசினாலோ, அல்லது எந்த ஒரு அரசின் சட்டம் அல்லது ஆணை யினாலோ இந்த அறக்கட்டளை அவர்களுக்கு சொந்தமானது அல்லது அவர்களால் கட்டுப்படுத்தப் படுவது அல்ல. வேறு சொற்களில் கூறுவதானால், இந்த அறக் கட்டளையின் எத்தகைய செயல்பாட்டின் மீதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒன்றிய அரசின் அல்லது எந்த ஒரு மாநில அரசின், அரசுகளின் கட்டுப்பாடு இல்லை என்று கூறலாம். இந்த அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வமற்ற தலைவராக பிரதமரும், அவரது பாதுகாப்புத் துறை, உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர்களும் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்களாகவும் இருப்ப வர்கள் ஆவர்.   இந்த PM CARES நிதியம் பற்றிய ஓர் அரசு விளம்பரத்தில், கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு மக்கள் அரசுக்கு நன் கொடைகள் வழங்குவதற்காக ஒரு புதிய நிதியத்தை பிரதமர் அறிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. மற்றொரு விளம்பரத்தில், எனது அரசு அல்லது மெரே சர்க்கார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தின் அறக்கட்டளைக் குழுமத்தின் தலைவராக பிரதமர் இருக்கும்போது, அந்த அறக்கட்டளை அரசுடன் தொடர்புடையது அல்ல என்று கூறுவது வியப்பும் ஆர்வமும் அளிப்பதாக இருக்கிறது. இந்த PM CARES நிதியம் அரசுடன் தொடர்பு அற்றது என்றால், அப்போது இந்த நிதியம் லாபம் ஈட்டித்தரும் ஓர் அலுவலகமாக பதவியாக ஆகிவிடும். அது மட்டுமன்றி, பிரதமரும், அவரது மூன்று அமைச்சர் களும் அரசமைப்பு சட்டப்படியான தங்களது அமைச்சர் பதவிகளை வகிப்பதற்கு தகுதி அற்றவர் களாக ஆக்கப்பட்டுவிட இயலும்.

இந்த நிதியத்தின் அறக்கட்டளை பொது அதிகாரம் பெற்ற ஓர் அரசின் அமைப்பா இல்லையா என்ற உண்மையை  பரிசீலித்து அறிந்து  தீர்மானிப்பதற்கான உண்மையாக, அறங்காவலர் குழு அவ்வாறு அமைக் கப்பட்டுள்ளதை எடுத்துக் கொள்ள முடியாது. அவர்க ளது அதிகார பூர்வமான அமைச்சர் பதவிகளில் இருந்து கொண்டே, பிரதமர் அந்த அறக்கட்டளையின் தலைவராகவும், அவரது மூன்று அமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர் என்பதுதான் அது  பொது அதிகாரம் பெற்ற அரசின் ஓர் அமைப்பு  என்று தீர்மானிப்ப தற்கான உண்மையாக இருப்ப தாகும். வசூலிக்கப்பட்ட நன்கொடை பணத்தை எவ்வாறு செலவு செய்வது என்ற தங்களது மிக முக்கியமான பணியை இந்த அறக்கட்டளையின் அறங்காவலர் குழுதான் முடிவு செய்கிறது. இந்த அறங்காவலர் குழுவின் செயல் பாடுகளை பிரதமரின் அலுவலகம்தான் நிர்வகிக்கிறது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு பொது அதிகாரம் பெற்ற அமைப்பு என்று அதன் தன்மையை தீர்மானிக்கும் மிகப் பெரிய அளவிலான கட்டுப்பாடு தான் இது. தாளபள்ளம் கூட்டுறவு சேவா சங்க வங்கிக்கும் கேரள மாநில அரசுக்கும் இடையேயான வழக்கில் உச்ச நீதி மன்றம் அளித்த சரித்திரப் புகழ் பெற்ற தீர்ப்பில் இது மிக நன்றாகாவே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

ஒரு பொது அறக்கட்டளைக்கு யாரோ ஒரு அரசு அதிகாரி அதிகாரபூர்வமற்ற சேவையை அளிக்கிறார் என்று குறிப்பிடுவது எந்த வித தொடர்பும் அற்றதாகும். ஒரு அரசு அதிகாரி தனது அலுவலகப் பணிகளை ஆற்றிக் கொண்டு இருக்கும்போதே, அந்த அறக்கட்டளைக்கு அதிகார பூர்வமற்ற முறையில் செயலாளர் போன்று உதவி செய்வது மட்டுமே, அந்த அமைப்பை பொது அதிகாரம் பெற்ற ஓர் அமைப்பு என்று அறிவிப்பதற்கான தொடர்பாக எப்போதுமே இருக்க முடியாது. பிரதமராலும், அவரது மூன்று அமைச்சர்களாலும், அவர்களது அதிகார பூர்வமான தகுதியில்  நிர்வகிக்கப்படும் பொது அறக்கட்டளை இது என்பதை ஒப்புக் கொண்டதன் மூலம்,  அதனை பொது அதிகாரம் பெற்ற ஓர் அரசு அமைப்பு என்று அறிவிக்கப்படுவது தேவையற்றது என்று அரசினால் கூறுமுடியாது. பிரதமரும் அவரது அமைச்சர்களும்,  அவர்களது சொந்த தகுதியின் அடிப்படையில் அறக்கட்டளையின் செயல்பாடுகளைப் பற்றி முடிவு எடுப்பது இல்லை. அறக்கட்டளையின் நோக்கங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை  எட்டுவதற்கு அவர்கள் பணியாற்றவே வேண்டும்.

இந்த அறக்கட்டளைக்கு நிதி கிடைக்கும் வழிகள்

ஒரு பொது அறக்கட்டளைக்கு தாங்களாக முன் வந்து நன்கொடைகள் அளிக்கப்படும்  பணத்துக்கு வெறும் வரி விலக்கு அளிப்பது மட்டுமே,  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 2(h)  பிரிவின் கீழ் தீர்மானம் செய்வதற்கான ஓர் உண்மையாக இருப்பது அல்ல. 1961 ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்திற்கு ஓர் அவசர சட்ட திருத்தம் பிரகடனப்படுத்தப்பட்டு,  PM CARESநிதியத்துக்கு அளிக்கப்படும் நன்கொடைகள் வருமான வரி சட்டத்தின் 80G  பிரிவின் கீழ் 100 விழுக்காடு  வரி விலக்கு பெறுவதற்கு தகுதி படைத்தவை என்றும் அறிவிக்கப்பட்டது.  PM CARESநிதியத்துக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், 2013 ஆம் ஆண்டு அயல்நாட்டு நன்கொடைகள் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ்    கார்ப்பரேட் நிறுவனங் களின் சமூக பொறுப்பை நிறைவேற்றுவதற்கான செலவு  என்று கருதப்படுவதற்கும் தகுதி படைத்தவை என்றும், இந்தPM CARESநிதியத்துக்கான நன் கொடைகள்  வரி விலக்கு பெறுகின்றன என்றும், இவ் வாறு அயல்நாடுகளில் இருந்து கிடைக்கும் நன் கொடைகளை நிர்வகிப்பதற்கு ஒரு தனி கணக்கு துவக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே ஒரு பெரிய அளவிலான நிதி திரட்டுவதே ஆகும்.

அறக்கட்டளை சொத்தின் பயன்பாட்டைப் பெறும் பயன்பாட்டாளர் பெறும் தொகை மற்றும் சொத்தின் நிலை பற்றிய மிகச் சரியான முழு தகவல்களையும் அறங்காவலர்கள் அளிக்க வேண்டும் என்று இந்திய அறக்கட்டளைகள் சட்டத்தின் 19 ஆவது பிரிவு கூறுகிறது. சட்டப்படியான இத்தகையதொரு அணுகு முறை  காரணமாக, “PM CARESநிதியத்தைப் பற்றிய அனைத்து தகவல்களும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 2(f)  பிரிவின்படி கேட்டுப் பெற இயன்றதாக இருக்க வேண்டும். தகவல் என்று இந்த இடத்தில் கூறும் போது, அது எந்தவொரு வடிவில் உள்ள ஆவ ணங்கள், தாக்கீதுகள், மின்னஞ்சல்கள், கருத்துகள், ஆலோசனைகள், பத்திரிகை செய்தி வெளியீடுகள், சுற்றறிக்கைகள், ஆணைகள், தினசரி பணிக் குறிப் பேடுகள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், செய்தியி தழ்கள், மாதிரிப் பொருள்கள், மின்னஞ்சல் வடிவில் வைக்கப்பட்டுள்ள எந்தவொரு புள்ளி விவரங்கள்,  தற்காலிகமாக செயல்பாட்டில் உள்ள வேறொரு சட் டத்தின் கீழ் ஒரு பொது அதிகாரம் பெற்ற அமைப்பிட மிருந்தும் ஒரு தனிப்பட்ட அமைப்பிடமிருந்தும் பெறுவதற்கு இயன்ற தகவல்கள் என்று பொருள்படும்.

ஓர் அறக்கட்டளை தனியாருடையதாக இருந் தாலும் சரி, அது பற்றிய தகவல்களை இந்திய அறக் கட்டளைகள் சட்டத்தின் மூலம்  கேட்டுப் பெறுவதற்கு இது வழிவகை செய்கிறது. “PM CARESநிதியம் பொது அதிகாரம் பெற்ற ஓர் அரசு அமைப்பு அல்ல என்று கூறுவது முட்டாள்தனமானது என்று கூறு வதைத் தவிர வேறு வழியில் கூறுவதற்கு முடியாது.

நன்றி: 'தி இந்து' 30-09-2021

தமிழில்: ..பாலகிருட்டிணன்.

No comments:

Post a Comment