சென்னை, அக். 6- தமிழ் நாட்டில் 1,449 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. 12ஆவது நாளாக பாதிப்பு குறைந் துள்ளது.
தமிழ்நாட்டில் நேற் றைய (5.10.2021) கரோனா பாதிப்பு குறித்து மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறப்பட்டு இருப்ப தாவது:-
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1 லட்சத்து 46 ஆயிரத்து 219 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 849 ஆண்கள், 600 பெண் கள் என மொத்தம் 1,449 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள் ளது. இதில் அதிகபட்ச மாக சென்னையில் 179 பேரும், கோவையில் 151 பேரும், ஈரோட்டில் 93 பேரும், செங்கல்பட்டில் 113 பேரும், தஞ்சாவூரில் 83 பேரும், திருப்பூரில் 72 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் குறைந்தபட்ச மாக ராமநாதபுரம், அரி யலூரில் தலா 7 பேரும், பெரம்பலூரில் 6 பேரும், தென்காசியில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 வயதுக்குட்பட்ட 76 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதி யவர்கள் 231 பேருக்கும் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. அந்தவகை யில் 12ஆவது நாளாக தமிழ்நாட்டில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழ்நாட்டில் இது வரை 15 லட்சத்து 59 ஆயி ரத்து 256 ஆண்களும், 11 லட்சத்து 12 ஆயிரத்து 117 பெண்களும், 3ஆம் பாலி னத்தவர் 38 பேர் உள்பட 26 லட்சத்து 71 ஆயிரத்து 411 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 114 குழந்தைகளும், 60 வய துக்கு மேற்பட்ட 3 லட் சத்து 85 ஆயிரத்து 914 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கரோனாவுக்கு தமிழ் நாட்டில் அரசு மருத்துவ மனையில் மட்டும் 16 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று (5.10.2021) உயிரி ழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 3 பேரும், நீலகிரி, கோவை, சென்னையில் தலா 2 பேரும் உள்பட 11 மாவட்டங்களில் உயிரி ழப்பு ஏற்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் உயிரி ழப்பு இல்லை. தமிழ்நாட் டில் இதுவரை மொத்தம் 35 ஆயிரத்து 682 பேர் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
கரோனா பாதிப்பில் இருந்து 1,548 பேர் டிஸ் சார்ஜ்’ செய்யப்பட்டுள் ளனர். சிகிச்சையில் 16 ஆயிரத்து 749 பேர் உள் ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment