புதுடில்லி, அக். 6- கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து கொடுக்கப்படவுள்ள ரூ.50 ஆயிரத்தை 30 நாள்களில் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா காரணமாக உயிரிழந்த வர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண் டும் என்றும் அதே போன்று, நோய் தொற்றால் இறந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சமீபத்தில் உச்ச நீதிமன்றத் தில் குமார் பன்சால் மற்றும் ரீபக் பன்சால் ஆகியோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கு ரைஞர், ‘‘கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவா ரணமாக ரூ.50 ஆயிரத்தை மாநில பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்படவுள்ளது’’ என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘30 நாள் களில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். இருப்பினும் இறப்பு சான்றிதழில் கரோனாவால் உயிரிழந்தார் என்று கூறப்பட வில்லை எனக் கூறி நிவாரணத்தை வழங்க மாநில அரசுகள் மறுப்பு தெரிவிக்கக் கூடாது. ஏற்கெனவே, கரோனா வால் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழில் ‘கரோனா மரணம்’ என குறிப்பிடவில்லை என்றாலும், இந்த நிவாரணத்தை பெறு வதற்கு உரிய அமைப்பை பாதிப்படைந்த குடும்பங்கள் அணு கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment