காவேரிப்பட்டணத்தில் தந்தைபெரியார் 143ஆவது ஆண்டு பிறந்தநாள் - சமூகநீதி நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

காவேரிப்பட்டணத்தில் தந்தைபெரியார் 143ஆவது ஆண்டு பிறந்தநாள் - சமூகநீதி நாள் விழா

காவேரிப்பட்டணம், அக்.15 - கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றிய, நகர திராவிடர் கழகம் சார்பில் பகுத்தறிவுப்பகலவன் உலக மனிதநேய மாண்பாளர் அறிவுலக ஆசான் தந்தைபெரியார் 143ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா செப்டம்பர் 17 சமூகநீதி நாளாக திராவிடப் பெருவிழாவாக காவேரிப்பட்டணம் நகரில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி, கழக கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.      

கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் தி.கதிரவன் தலைமை வகித்தார் ஒன்றியத்தலைவர் பெ.செல்வம், செயலாளர் பெ.செல்வேந்திரன், அமைப்பாளர் சி.இராசா, மேனாள் ஒன்றியத் தலைவர் சி.சீனிவாசன், நகர பொறுப்பாளர் பூ. இராசேந்திரபாபு ஆகியோர் முன்னிலையில்   பொதுக்குழு உறுப்பினர் கோ.திராவிடமணி, காவேரிப்பட்டணம் தி.மு. நகரச் செயலாளர் ஜே.கே.எஸ் பாபு, மேனாள் மாவட்ட கழக தலைவர் பெ.மதிமணியன், தி.மு.. ஒன்றிய துணைச்செயலாளர் பையூர் இளங்கோ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

நிகழ்ச்சியில் திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி தலைவர் இல. ஆறுமுகம், செயலாளர் வெ.புகழேந்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் செ..மூர்த்தி, கிருட்டினகிரி ஆட்டோ .கோ..இராசா, சரவணன், தே.மு.தி.. பொறுப்பாளர் கி.கோவிந்தராஜ், தி.மு.. பாரிவள்ளல், எம்.ராஜி பிரகாசம், தங்கராஜி, சமரசம், வி.சி..சார்பில் ஒன்றியச் செயலாளர் பெ.சசிக்குமார், .சந்தீஸ், செந்தில், சிவக்குமார் உள்பட தி.. தி.மு.., வி.சி. உள்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும், தோழர்களும் கலந்துகொண்டு சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

No comments:

Post a Comment