நாகை,அக்.28- தந்தைபெரியார் பிறந்த நாள் விழா, சமூக நீதிநாள் விழாவாக கொண்டாடப்படுவ துடன் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களுடன் சமூகநீதி நாள் உறுதியேற்பும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல் லூரியில் தந்தைபெரியார் 143ஆவது பிறந்த நாள் சமூகநீதிநாள் விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், கல்லூரியில் பணி யாற்றும் அலுவலர்கள், பணியா ளர்கள் மற்றும் மாணவ, மாணவியர் அனைவரும் சமூகநீதி நாள் உறுதி ஏற்றனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாள ராக நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கலந்துகொண்டு ‘என்றென்றும் பெரியார்’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
நாகப்பட்டினம் செல்லூர் அரசு கலை மற்றும அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாணவர் களின் கேள்விகளுக்கு சிறப்பு விருந் தினர் ஆளூர் ஷாநவாஸ் விளக்கமாக பதிலளித்தார்.
சமூக நீதி நாளில் மாணவர்களுக்கு சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு களைக் களைவதற்கு சமூகநீதியின் அவசியம் குறித்தும், சமூகநீதிக்காக தம் வாழ்நாள் முழுவதும் இடை யறாது தொண்டாற்றிய தந்தை பெரியார் பணிகளின் விளைச்சல், சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்
தார்.
No comments:
Post a Comment