தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தந்தை பெரியாரின் 143ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 3, 2021

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தந்தை பெரியாரின் 143ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம்

சென்னை, அக்.3 தமிழ்நாடெங்கும்  தந்தை பெரியாரின் 143ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கீழ்குப்பம்

கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் கீழ்குப்பம் கிராமத்தில் உலக மனிதேயமாண்பாளர் பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு பிறந்தநாள் சமூகநீதி நாளாக கீழ்குப்பம் திராவிடர் கழகம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட இணைச்செயலாளர் .பழனிச்சாமி தலைமை வகித்தார்.  தி.மு.. மருத்துவரணி துணை அமைப்பாளர் எம்.மனோகரன், ஊர் பெரியவார் கே.சசிக்குமார், அரசம்பட்டி மேனாள் ஊராட்சி தலைவர் கே.சம்பத், ஒன்றிய குழு உறுப்பினர் ஜி.சுரேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கீழ்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.சண் முகா னந்தம் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனமான கழகக் கொடியை ஏற்றினார். பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் மு. வேடியப்பன், மா.சீவரத்தினம், . தமிழரசு, பொ.கிருட்டினமூர்த்தி உள்பட கழகத்தோழர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு சமூகநீதி நாள் இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

புலியாண்டியூர் தேர்ப்பட்டி

காவேரிப்பட்டணம் ஒன்றியம் புலியாண்டியூர் தேர்ப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் திராவிடர் கழக இனமான கொடி ஏற்றி உலக மனிதேயமாண்பாளர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 143ஆவது ஆண்டு பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் சி.இராசா தலைமையில் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், ஒன்றியச்செயலாளர் பெ.செல்வேந்திரன், மேனாள் ஒன்றியத் தலைவர் சி.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர் செ..மூர்த்தி கழகக் கொடி ஏற்றினார். மேனாள் மாவட்டத் தலைவர் பெ.மதிமணியன் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.திராவிடமணி, தா.சுப்பிரமணியம், மாவட்ட அமைப்பாளர் தி. கதிரவன் , தி..அனலரசு, தி..அறிவுக்கனல், செ.வீரபாண்டி, மூ..சங்கத்தமிழ் உள்பட கழகத்தோழர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாப்பட்டது.

சிட்லப்பாக்கத்தில் பெரியாரின் சமத்துவ உறுதிமொழி

சிட்லப்பாக்கம் அன்னை இந்திரா நகரில் பெரியாரின் பெயர் பலகை அருகில் 17.9.2021 அன்று காலை 9 மணியளவில் சென்னை மண்டல திராவிடர் கழகம் சார்பாக தந்தை பெரியார் சிலை வைத்து அறிஞர் அண்ணா சிலையும் வைத்து சிலை அருகில் இராவணன் இல்லத்தார் சார்பாகவும், சிவா நிறுவனத்தார் சார்பாகவும் திருமணி நிறுவனத்தார் சார்பாகவும், தந்தை பெரியாரின் சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சென்னை மண்டல கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி தலைமையில் செ..சாலமோன், அனகை வாசு, முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க சென்னை மண்டல மாணவர் கழகத் தலைவர் .இர.சிவசாமி வரவேற்புரையாற்றினார்.

தொடர்ந்து செ,இரா.தீபக்சுந்தர், இராவணன், பிரபாகரன், சீனு, இராகுல், ஆனந்த், திலிபன், தீரன், அன்புமணி, தானு, .கசேந்திரன், அரவிந்த் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

கவிஞர் தங்கபாண்டி நன்றியுரையாற்றினார்.

குட்டம் செல்வகுமார், சோமங்களம் முத்துகுமாரசாமி, திருவண்ணாமலை இராசேசு, அத்தினாபுரம் சிலம்பரசன், காட்டு மன்னார் கோயில் ஆனந்தராஜ், இராமாபுரம் முக்சேசு, திண்டிவனம் மணி, அஸ்தினாபுரம் இரவி, மறைமலைநகர் மணி, குளத்துமேடு இமேசுவரன், மப்பேடு அருண்காந்தி, அஸ்தினாபுரம் அய்யப்பன், வந்தவாசி அர்ச்சுனன், திருவாரூர் சந்திரசேகர், குமரி கிளாட்வின், நெடுங்குன்றம் நடராசன், வேங்கடமங்களம் ஏசா, பல்லாவரம் இராசேசு, குன்றத்தூர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம்

குடியாத்தத்தில்அறிவாசான் பெரியார் 143ஆவது பிறந்தநாளை சமூகநீதி நாளாக கொண்டாடப்பட்டது. பெரியார் சிலை 3 நாட்களாக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. 17.09.2021 அன்று காலை 9.00. மணிக்கு, அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர்.

குடியாத்தம் சட்டப்பேரவை தி.மு..உறுப்பினர் அம்முலு விஜயன் அவர்கள் மாலை அணிவித்தார். வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன், மகளிரணி அமைப்பாளர் .தேமொழி, மண்டல மகளிரணி .ஈஸ்வரி, மாவட்ட தலைவர் வி..சிவக்குமார் மற்றும் .., இளைஞரணி,  மகளிர் பாசறை,  மாணவரணி, அனைத்துக்கட்சி தோழர்களும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.

No comments:

Post a Comment