அபுஜா, அக். 28- மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அய்.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங் கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர் கள் குழுக்களும் செயல் பட்டு வருகின்றன.
இந்த அமைப்புகள் பொதுமக்கள், பாது காப்பு படையினரை குறி வைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வரு கின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் நைஜர் மாகாணத்தில் உள்ள மஷீகு நகரின் மசகுஹா கிராமத்தில் இஸ்லாமி யர்களின் மத வழிபாட்டு தலமான மசூதி ஒன்று உள்ளது. அந்த மசூதியில் 26.10.2021 அன்று காலை முஸ்லிம்கள் தொழுகை யில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர். அப்போது, மசூ திக்குள் புகுந்த துப்பாக்கி யேந்திய நபர் தொழுகை யில் ஈடு பட்டுக் கொண் டிருந்தவர்கள் மீது கண் மூடித் தனமாக துப் பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூட் டில் மசூதியில் தொழுகை யில் ஈடுபட்டுக் கொண் டிருந்தவர்கள் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
No comments:
Post a Comment