வாசிங்டன், அக். 28- முழுமை யாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்கள் நவம்பர் 8-ஆம் தேதி முதல் அமெரிக்கா வரலாம் என அமெரிக்க அரசு கடந்த சில வாரங் களுக்கு முன்பு அறிவித் தது.
இந்த நிலையில் அமெ ரிக்கா வரும் பன்னாட்டு பயணிகளுக்கான புதிய பயண கொள்கையை அதிபர் ஜோ பைடன் நிர் வாகம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் பின் வருமாறு:-
அமெரிக்கா வரும் விமானங்களில் பயணம் செய்வதற்கு முன்னர் பய ணிகள் தடுப்பூசி போட்டி ருப்பதை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். அமெரிக்காவின் புதிய பயணக் கொள்கை மற் றும் தடுப்பூசி கொள்கை குறித்து பயணிகள் தெரிந் திருப்பதையும் விமான நிறுவனங்கள் உறுதி செய்வது அவசியம்.
பன்னாட்டுப் பயணி கள் அமெரிக்கா புறப்படு வதற்கு 72 மணி நேரங் களுக்கு முன்பு பெறப் பட்ட கரோனா ‘நெகட் டிவ்' சான்றிதழை வழங்க வேண்டும்.
அதே போல் தடுப்பூசி போட்டு கொள்ளாத அமெரிக்கர்கள் மற்றும் தடுப்பூசியில் இருந்து விலக்கு கேட்கும் வெளி நாட்டு பயணிகள் கிளம் புவதற்கு ஒரு நாள் முன்பு பெறப்பட்ட கரோனா 'நெகட்டிவ்' சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும், சில மருத்துவ காரணங்களுக் காக சிகிச்சை பெறுபவர் களுக்கும் தடுப்பூசி போடு வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment