நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு கல்வி, வாகனக் கடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு கல்வி, வாகனக் கடன்

கூட்டுறவுத்துறை அனுமதி

சென்னை, அக்.28 நியாயவிலைக்கடை பணியாளர் களுக்கு முன்பணம் வழங்கவும், கல்வி, திருமணம் மற்றும் வாகனக்கடன் அளிக்கவும் கூட்டுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது.

கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை  அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பொது விநியோகத்திட்ட விற்பனையாளர்கள் மற்றும் ஊழியர் களின் ஊதியம் அரசால் நிர்ணயிக்கப் பட்டாலும், அவர்கள் பணிபுரியும் நியாவிலைக் கடைகள் எந்த கூட்டுறவு சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளதோ, அந்த சங்கத்தின் பணியாளராகவே கருதப்படுவார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் ஊதிய ஒப்பந்தம் மற்றும் துணை விதிகளின்படி, சங்க பணியாளர்களுக்கு திருமணம், கல்விக்கடன், வாகனக்கடன், வீடு கட்டும் கடன் மற்றும் நுகர்வோர் கடன்கள் வழங்கப்படுவதைப் போன்றே, நியாய விலைக் கடை பணியாளர்களுக்கும் வழங்கலாம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

உரிய ஒழுங்குமுறை விதிகளை ஒவ்வொரு சங்கத்திலும் ஏற்படுத்தி தகுதியின் அடிப்படையில் ரேசன் பணியாளர் களுக்கு முன்பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மண்டல இணை பதிவளர் களுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தர விட்டுள்ளார்.

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு

திருப்பத்தூர், அக்.28 பரோலில் வெளியே வந்த பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.  தொடர்ந்து கடந்த மே மாதம் 28ஆம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு சென்றார். வீட்டில் இருந்தபடி சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு பேரறிவாளன் சிகிச்சை எடுத்து வந்தார். 

இந்த சூழலில் கடந்த ஜூன் மாதம் 28ஆம்தேதி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து பரோல் நீட்டிக் கப்பட வேண்டும் என்ற அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு நான்கு முறை பரோல் நீட்டிக் கப்பட்டது. அந்த பரோல் நீட்டிப்பு முடிவடைந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment