ஹோனியாரா, அக். 28- பசிபிக் பெருங்கடலில் அமைந் துள்ள சாலமன் தீவுகளில் 2ஆ-ம் உலகப் போரின் போது வீசப் பட்ட வெடிக்காத குண்டு கள் பல பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கின்றன. இந்த நிலையில் சாலமன் தீவுகளின் தலைநகர் ஹோனியாராவை சேர்ந்த ஒரு தம்பதி 26.10.2021 அன்று அதிகாலையில் தங்களின் 2 மகன்களுடன் வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தனர்.
அப்போது அவர்கள் மண்ணில் குழி தோண்டி விறகுகளை போட்டு நெருப்பை கொளுத்தி குளிர் காய்ந்தனர். அப் போது சற்றும் எதிர்பா ராத வகையில் அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இதில் தந்தையும், மக னும் நிகழ்விடத்திலேயே இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தனர். மனைவி மற்றும் மற்றொரு மகன் பலத்த காயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மற் றும் வெடிகுண்டு நிபு ணர்கள் நிகழ்விடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
இதில் அந்த குடும்பம் குளிர் காய்வதற்காக நெருப்பு வைத்த இடத்தில் மண்ணுக்கு அடியில் 2ஆ-ம் உலகப் போரின் வெடி குண்டு புதைந்து இருந்து வெடித்து சிதறியது தெரிய வந்தது.
No comments:
Post a Comment