கோவேக்சின் தடுப்பூசி: கூடுதல் தரவுகளை கோரும் உலக சுகாதார அமைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

கோவேக்சின் தடுப்பூசி: கூடுதல் தரவுகளை கோரும் உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா, அக். 28- இந்தியா வில் கரோனாவுக்கு எதி ராக உள்நாட்டில் உரு வாக்கப்பட்ட தடுப்பூசி கோவேக்சின். அய்தரா பாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்த தடுப்பூசியை உரு வாக்கியுள்ளது.

இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தின்கீழ் பயன் பாட்டில் உள்ள இந்த தடுப்பூசியை உலக சுகா தார அமைப்பின் அவசர கால பயன்பாட்டு அங்கீ கார பட்டியலில் சேர்க்கக் கோரி பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்து உள்ளது. எனினும் இது வரை அனுமதி வழங்கப் படவில்லை.

இந்தநிலையில் கோவேக்சின்தடுப் பூசியை அவசர கால பயன் பாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து முடி வெடுக்க உலக சுகாதார அமைப்பின்  நிபுணர்  குழு கூடியது. இந்தக் கூட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் தரவுகளை நிபு ணர் குழு கோரியுள்ளது.

இதனால், கோவேக் சின் தடுப்பூசிக்கு அங்கீகா ரம் கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து  இறுதி மதிப்பீடு செய்வதற்காக வரும் நவம்பர் 3 ஆம் தேதி நிபு ணர்குழு கூட உள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

No comments:

Post a Comment