சென்னை, அக்.28 ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் அதிகாரிகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டதில் 77 போலி நகைகள் மற்றும் தரம் குறைவான சீல் வைக்கப் பட்ட நகைப் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக் கடன் தள்ளுபடி செய்யப் படும் என சட்டமன்ற தேர் தல் பரப்புரையின்போது மு.க.ஸ்டாலின் தெரிவித் திருந்தார். அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் கூட் டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். இதனை யடுத்து, பல மாவட்டங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த வர்கள் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்று முறை கேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
அவ்வாறு விதிகளை மீறி பெறப்பட்ட நகைக்கடன் தொகையை வசூலிக்க தமிழ் நாடு அரசு உத்தரவிட்டுள் ளது. இதுதொடர்பாக அனைத்து மண்டல பதிவா ளர்களுக்கும் கூட்டுறவு சங் கங்களின் பதிவாளர் சுற்ற றிக்கை அனுப்பியிருந்தார். அதில், 5 சவரனுக்கு அதிக மாக விதிகளை மீறி நகைக் கடன் பெற்றவர்களின் ஆதா ரங்களை சேகரிக்க வேண்டும் எனவும், முறைகேடுகளில் ஈடுபட்டவர்களிடம் இருந்து நகைக்கடனை வசூ லிக்கவும், தவணை தொகையை கட்ட தவறியவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்கவும் கூட் டுறவு சங்கங்களின் பதிவா ளர் உத்தரவிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது கூட்டுறவு வங்கி களில் பொது நகைக்கடன் முறைகேடு நடந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட் டுள்ளது.
ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் அதிகாரிகளை கொண்டு ஆய்வு மேற் கொண்டதில் 77 போலி நகைகள் மற்றும் தரம் குறை வான சீல் வைக்கப்பட்ட நகைப் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில நபர்களுக்கு குறைவாக எடை கொண்ட நகைகளுக்கு அதிக எடை என எழுதப் பட்டு கூடுதலாக நகைக்கடன் வழங்கி முறைகேடில் ஈடுபட் டதும் தெரியவந்துள்ளது. மொத்தம் 2 கோடியே 39 லட்சம் இவ்வாறு மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, போலி நகைக்கடன் வழங்க உறு துணையாக இருந்த வங்கிப் பணியாளர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மீது தக்க நடவடிக்கை மற்றும் விசாரணை மேற்கொள்ள திருவண்ணாமலை இணைப் பதிவாளர் ,கூட்டுறவு சங்க பதிவாளருக்கு பரிந்துரைத் துள்ளார்.
இதன் அடிப்படையில் வங்கிப் பணியாளர்கள் 3 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறை கேடில் ஈடுபட்ட பணி யாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள ப்படவுள்ளது. அதேபோல முறைகேடு தொடர்பான செய்யாறு துணைப்பதிவா ளர் விசாரணை மேற் கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment