நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு
சென்னை,அக்.5- தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல் பாடுகள் குறித்து தலைமைச்செயலகத் தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (4.10.2021) ஆய்வு மேற்கொண் டார்.
முன்பு ஒருபோதும் இல்லாத அளவிற்கு, கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி முடிவடைந்த 2020-2021-ஆம் ஆண்டு ‘காரிப்’ சந்தைப்பருவத்தில் 44.90 லட்சம் டன் நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கொள் முதல் செய்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ‘காரிப்’ பரு வத்தில் 12.50 லட்சம் டன் அளவிற்கு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப் பட்டுள்ளது.
மேலும், முதன் முறையாக இந்த கொள்முதல், விவசாயிகளுக்கு மட் டுமே பலன் அளிக்கக்கூடியதை உறுதி செய்வதற்காக இணைய முறையிலும் பதிவு செய்து, நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1-ஆம் தேதி முதல் தொடங்கும் ‘காரிப் 2021-2022’ சந்தைப் பருவத்தில் இதுவரை 752 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப் பட்டு செயல்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டில் இதே காலக் கட்டத்தில், 608 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், விவசாயிகள் பயனடையும் வகையில் இந்த ஆண்டு 144 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளன. மேலும், தேவைப் படும் இடங்களில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற் கும், நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்வதற்கும் அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவு ரைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் இல்லாத வகையில், எதிர்பாராத அளவிற்கு, செப்டம்பர் மாத இறுதியிலும், அக் டோபர் முதல் வாரத்திலும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வரக் கூடிய நிலையில், நெற்பயிர்களும், நெல் மூட்டைகளும் ஈரம் அடைந்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு, நெல்லை கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவை உயர்த்துவதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலை பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப் பட்ட நெல்லுக்குரிய பணப்பட்டு வாடாவை, விவசாயிகளுக்கு எவ்வித காலதாமதமும் இன்றி வழங்கிட வேண்டுமெனவும், டெல்டா மாவட் டங்களுக் கான கண்காணிப்பு அலு வலர்கள் உடனடியாக மாவட்டங் களுக்கு சென்று இந்த நெல் கொள் முதல் நிலையங்களை ஆய்வு செய்து, எவ்வித தடங்கலும் இன்றி கொள் முதல் செய்யப்படுவதை உறுதி செய் யுமாறும் முதல்-அமைச்சர் உத்தர விட்டுள்ளார்.
No comments:
Post a Comment