பெரியார் கேட்கும் கேள்வி! (467) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 3, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (467)

மதம், அரசாங்கம், கடவுளில் ஒழுக்கம் காண முடிகிறதா? இவையெல்லாம் மாற்றப்படணுமானால் மதத்தை, அரசாங்கத்தை, கடவுளைத் திருத்த வேண்டாமா? இவையொன்றையும் செய்யவில்லையானால் ஒழுக்கந் தானே முறியாமல் என்ன நடக்கும்? ஒழுக்கம் இல்லா விட்டால் எலிக்கும், பூனைக்கும், மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? பூனை, எலியிருக்கிற வீட்டில் வாழ்கிறோமே தவிர அறிவுக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது? எப்போது  நாணயமற்றவனைக் கேவலமாக நினைக்க வில்லையோ அப்போது இவன் மனிதனாக இருக்கிறான் என்று சொல்ல என்ன இருக்கிறது?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’ 

No comments:

Post a Comment