பையூர், அக்.3 கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பையூர் திராவிடர் கழகம் சார்பில் பகுத்தறிவுப்பகலவன் உலக மனிதநேய மாண்பாளர் அறிவுலக ஆசான் தந்தைபெரியார் 143 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா செப்டம்பர் 17-சமூகநீதி நாளாக திராவிடப் பெருவிழாவாக பையூரிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி, கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி மிகுந்த எழுச்சியோடு சிறப்பாகக்கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கிருட்டினகிரி மாவட்ட மேனாள் தலைவர் பெ.மதிமணியன் தலைமை வகித்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஒன்றியத்தலைவர் பெ.செல்வம், ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், பையூர் கிளை செயலாளர் சி.இராசா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட அமைப்பாளர் தி.கதிரவன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.திராவிடமணி, தா.சுப்பிரமணியம், காவேரிப் பட்டணம் ஒன்றிய தி.மு.க.சார்பில் ஒற்றியச்செயலாளர் தேங்காய் சி.சுப்பிரமணி, துணை செயலாளர் இளங்கோ, பையூர் தி.மு.க.ஊராட்சி செயலாளர் ருத்திரமணி, பவுன்ராஜ், பையூர் ஊர் பெரியவர் பெருமாள், தி.க.குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் இல. ஆறுமுகம் செயலாளர் வெ.புகழேந்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் செ.ப.மூர்த்தி, மேனாள் ஒன்றியதலைவர் சி.சீனிவாசன், ஒன்றிய அமைப்பாளர் சி.இராசா, நகர பொறுப்பாளர் பூ. இராசேந்திரபாபு, கிருட்டினகிரி ஆட்டோ அ.கோ..இராசா, சரவணன், பெ.சக்திவேல், சின்னப்பாப்பா, தமிழ்ச்செல்வி,கவிதா, தி.மு.க.திருமால்,பாரிவள்ளல், நாகராஜ், சின்னராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒன்றியச் செயலாளர் பெ.சசிக்குமார், ஆ.சந்தீஸ், செந்தில், சிவக்குமார், பெரியார் பிஞ்சுகள் செ.வீரபாண்டி, தி.அ.அனலரசு, தி.அ.அறிவுக் கனல், மூ.த.சங்கத்தமிழ் உள்பட தி.க., தி.மு.க., வி.சி.க,. உள்பட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் பெரும் திரளாக கலந்துகொண்டு
தமிழக முதலமைச்சர் அவர்கள்
அறிவித்துள்ள சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ஒன்றிய கழகச் செயலாளர் பெ.செல்வேந்திரன் ஏற்பாட்டில் 5 கிலோ கேக்குவெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்டத் தலைவர் த. அறிவரசன், மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், மண்டல இளைஞரணி வ. ஆறுமுகம், மத்தூர் ஒன்றியத்தலைவர் கி.முருகேசன், துணைச்செயலாளர் தனஞ்செயன், கிருட்டினகிரி நகரச் செயலாளர் கோ.தங்கராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment