பெரியாரியல் பயிற்சி முகாம் வடசென்னை கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 3, 2021

பெரியாரியல் பயிற்சி முகாம் வடசென்னை கலந்துரையாடலில் முடிவு

சென்னை, அக்.3 வடசென்னை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 25.9.2021 அன்று மாலை 5.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிட மகளிர் பாசறை .மரகதமணி கடவுள் மறுப்புக் கூறினார். வடசென்னை மாவட்ட துணை அமைப்பாளர் சி.பாசுகர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

பெரியாரியல் பயிற்சி முகாம்

வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். அவர் தமது உரையில், வடசென்னை மாவட்டத்தின் முக்கியமான பகுதியில், தனி அரங்கத்தில் பெரியாரியல் பயிற்சி முகாம் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதைக் பற்றிக் குறிப்பிட்டார். அந்த பயிற்சி முகாமில் தோழர்களையும், இளைஞர்களையும் பெருமளவில் பங்கேற்கச் செய்வதற்கு உரிய வகையில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

ஆங்காங்கே சிற்றரங்கங்களில் கழகக் கொள்கை விளக்கக் கூட்டங்களை நடத்துதல், பெரியர் உலகம் நன்கொடை, ‘விடுதலைசந்தா ஆகியன குறித்தும் விளக்கிப் பேசினார்.

உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன

கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, வடசென்னை மாவட்டத்தில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து பிரச்சாரப் பணிகள் சிறப்பான அளவில் உள்ளதைக் குறிப்பிட்டார்.

அப்பணிகள் தொடர்ந்து நடைபெறுவது - நல்ல பிரச்சாரமாக அமையுமென்பதால் சுவரெழுத்துப் பணிகளைத் தொடர்ந்து செய்யுமாறு மாவட்டக் கழகத் தோழர்களைக் கேட்டுக் கொண்டார்.

வி.பன்னீர்செல்வம் அவர்கள், கழக பொறுப்பாளர்கள், தோழர்களிடம் கழக உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். மகிழ்ச்சியுடன் கழகத்தோழர்கள் அவற்றைப் பெற்றுக் கொண்டனர்.

இக்கலந்துரையாடல் கூட்டத்தில், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், துணைச் செயலாளர் சு.மும்மூர்த்தி, அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், செம்பியம் தலைவர் பா.கோபாலகிருட்டிணன், பெரம்பூர் செயலாளர் பாஸ்கர், மங்களபுரம் அமைப்பாளர் மா.டில்லிபாபு, ஆகாஷ் சோகானாஸ் ஏஞ்சல், திராவிட மாணவர் கழகம் எருக்கமாநகர் தோழர் சு.தமிழ்செல்வன், பா.ரமணி, பா.நதியா மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு எதிர்வரும் காலங்களில் கழக ஆக்கப்பணிகள் குறித்துப் பேசினர்.

இரங்கல்

17.9.2021 அன்று மறைவுற்ற கொடுங்கையூர் பகுதி, முத்தமிழ்நகர் கழக அமைப்பாளர் வி.பிரபாகரன் மறைவுக்கு இரண்டு மணித்துளிகள் அனைத்துத் தோழர்களும் அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிறைவாக கண்ணதாசன் நகர் அமைப்பாளர்கண்மணிதுரை நன்றி கூறினார்


No comments:

Post a Comment