பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக முதியோர் தின விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 3, 2021

பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக முதியோர் தின விழா

திருச்சி, அக்.3 திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக முதியோர் தின விழா 01.10.2021 அன்று மாலை 3 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந் தியல் கல்லூரியின் முதல்வர் முனை வர் இரா. செந்தாமரை தலைமை வகித்து உரையாற்றினார்.

அவர் தமது உரையில்,

குழந்தைகள் தினம், மகளிர் தினம், இளைஞர்கள் தினம் என பல தினங்களை நாம் கொண்டாடி னாலும் இத்தினங் களுக்கெல்லாம் அடித்தளமாக இருக்கக்கூடிய முதியோர் தினத்தினை முதலில் கொண்டாட வேண் டும் என்றும் இத்தினத்தினை மறந்ததால்தான் முதியோர் இல்லங்கள் அதிகம் உருவாகக்கூடிய அவலநிலை உள்ளது என்றும் உரை யாற்றினார்.

மேலும் முதியோர்களின் அனு பவ அறிவை வெறும் படிப்பினாலும்  தொழில்நுட்பத்தினாலும் பெற்றிட முடியாது.   அலைபேசிகளிலும், வீண் அரட்டைகளிலும் நேரத்தை தொலைக்கக்கூடிய இளைஞர்கள் வீட்டிலிருக்கும் பெரியவர்களிடம் மனம் விட்டு பேசுவதனால் மகிழ்ச்சி யான குடும்பத்தை  சமுதாயத்தை உருவாக்க முடியும். அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் 94 வயது வரை சமுதாயப்பணியாற்றிட இளைஞரைப் போல சூறாவளி சுற்றுப்பயணம் செய்தவர்கள். நம்மு டைய நிறுவனத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் 87 வயதிலும் இயக்கப்பணி, கல்விப் பணி, சமுதாயப் பணி யாற்றிட தொய்வில்லாமல் உழைக்கக் கூடிய வர்கள். இவர்கள் தலை மையின் கீழ் இணைந்துள்ள நாம் எவ்வித கவலைகளுக்கும் இடம் தராமல் மனமகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் வாழ வேண்டும். இங்குள்ள பெரி யோர்கள் ஆசிரியர் அவர்களின் வாழ்வியல் சிந்தனை களை அதிகம் படிக்க வேண்டும். முதியோர்களுக் காகவும், அவர்களின் நலனுக் காகவும் நிறைய கட்டுரைகளை எழுதியிருப்பதாகவும் தெரிவித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரியார் பெருந்தொண் டர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்த சாமி கைவல்யம் முதி யோர் இல்ல பெரியார் பெருந் தொண்டர்கள்  இராமச்சந்திரன்,  ஆறுமுகம், சந்திரசேகர், நாகம் மையார்  குழந்தைகள் இல்லத்தைச் சார்ந்த   அலமேலு, வளாக தோட்டப் பணியாளர்கள் பி.முருகன், மனோகர்,  கே. முருகன் மற்றும் பெரியார் மருந்தியல் கல் லூரியின் தோட்டப்பணியாளர்               ஷேக்தாவூத் ஆகியோர் தமது அனு பவங்களை பகிர்ந்து கொண்டனர்.  சாமி கைவல்யம் முதியோர் இல்ல பெரியார் பெருந்தொண்டர்கள் இவ்வில்லத்தில் நிம்மதியுடனும் அனைத்து வசதியுடனும் இருப்ப தாக தெரிவித்தனர். மேலும் பிள்ளை களை வளர்க்கும் பொழுது படிப்பை மட்டும் சொல்லித் தராமல் பெற் றோர்களை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதனையும் சொல்லித்தரவேண்டும். குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட் டாலும் இவ்வளாக மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணி யாளர்களின் அணுகுமுறைகள் தங்களைப் போன்றோரை நெகிழச் செய்வதாக உரையாற்றினர். மேலும் முதியோர் தின விழாவினை சிறப்பாக முறையில் ஏற்பாடு செய்த கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் மனமார்ந்த நன்றியினை தெரித்துக்கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த முதியோர்கள் அனைவருக்கும்     போர்வை வழங்கி பொன்னாடை போர்த்தி சிறப்பிக் கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் .மு. இஸ்மாயில் மற்றும் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக பெரியார் மன்ற இணைச்செயலர்  . சமீம்  வரவேற் புரையாற்றினார். பெரியார் மன்ற செயலர் பேரா. ... முகமது சபீஃக் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த பேராசிரியர்கள் அனைவரும் பெரியோர்களுக்கு தமது முதியோர் தின வாழ்த்து தல்களைதெரிவித்துக்

கொண்டனர்.

No comments:

Post a Comment