மும்பை, அக். 9- நாட்டில் டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் உடனடி பேமெண்ட் சேவையான அய்எம்பிஎஸ் பரி மாற்றத்தின் அளவு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த் தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறிய தாவது: நாட்டில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் அய்எம்பிஎஸ் பரிமாற் றத்தின் அளவை ரூ.2 லட்சத்திலி ருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது. இப்போது அய்எம்பிஎஸ் மூலம் நாள்தோறும் அதிகபட்ச மாக ரூ.2லட்சம் வரைமட்டுமே பரிமாற்றம் செய்ய முடியும், இனிமேல் ரூ. 5 லட்சம்வரை பரி மாற்றம் செய்யலாம்.
இதன்மூலம் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் செயலி, வங்கி கிளைகள், ஏடிஎம், எஸ்எம்எஸ்,அய்பிஆர்எஸ் ஆகி யவை மூலம் பரிமாற்றம் அதிக ரிக்கும். தற்போது ஆர்டிஜிஎஸ், நெப்ட் மற்றும் அய்எம்பிஎஸ் சேவை 24 மணிநேரமும் செயல் பட்டு வருகிறது.
இணையம் மூலம் மட்டுமே டிஜிட்டல் பரிமாற்றம் செய்யப் பட்டு வரும்நிலையில் இனிமேல், ஆஃப் லைன் மூலமும் பரிமாற்றம் செய்யும் முறையை விரைவில் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய உள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு பரி சோதனை முயற்சிகள் நடந்தன. இதில் இணைய இணைப்பின் சக்தி குறைவாக இருந்தாலும் அல் லது இல்லாவிட்டாலும் டிஜிட் டல் பரிமாற்றம் செய்யமுடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த 2020 செப்டம்பர் முதல் 2021 ஜூன் வரையில் ஆஃப் லைனில் டிஜிட்டல் பரிமாற்றம் செய்து பரிசோதிக்கப்பட்டது. இதில் வெற்றிகரமாக 2.41 லட்சம் பரிமாற்றத்தில் ரூ.1.16 கோடி மதிப்புக்கு டிஜிட்டல்பரிமாற்றம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment