பட்டாசு குடோனில் தீவிபத்து : 7 பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

பட்டாசு குடோனில் தீவிபத்து : 7 பேர் உயிரிழப்பு

சங்கராபுரம், அக். 28- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந் தவர் செல்வகணபதி. இவர் கடை வீதியில் முருகன் சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் கடை நடத்தி வந் தார். தீபாவளி பண்டிகையை யொட்டி விற்பனை செய்வதற்காக பட்டாசுகளை மொத்தமாக வர வழைத்து கடையின் பின்புறம் உள்ள குடோனில் வைத்திருந்தார்.

26.10.2021 அன்று மாலை மின் கசிவு காரணமாக பட்டாசு குடோன் தீ பிடித்து எரிய தொடங்கியது. குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதில் தீ மளமளவென அருகில் இருந்த பேக்கரி, ரெடிமேட் கடை களுக்கும் பரவியது.

அப்போது பேக்கரியில் இருந்த 5-க்கும் மேற்பட்ட எரிவாயு உருளை கள் ஒன்றன்பின் ஒன்றாக பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. அப்போது அந்த பகுதியில் எரிமலை வெடித்து சிதறுவதுபோல் தீ பிழம் பாக காட்சியளித்தது.  பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் அங் கிருந்து சிதறி ஓடினர். இந்த பயங்கர வெடிவிபத்தின்போது அருகில் இருந்த கடைகள் இடிந்து தரை மட்டமானது. மேலும் அந்த கடை களுக்கு அருகில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த வாகனங்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தீ விபத்துகுறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென் றனர். கடைகளில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட னர். இருப்பினும் எரிவாயு உருளை கள் வெடித்து தீ கொளுந்துவிட்டு எரிந்ததின் காரணமாக தீயை அணைக்க முடியவில்லை.

உடனே கள்ளக்குறிச்சி, திருக் கோவிலூர் பகுதியில் இருந்து தீய ணைப்பு வாகனங்கள் வரவழைக்கப் பட்டன. இந்த விபத்தின்போது மின்சாரம் தடைபட்டதாலும், எரி வாயு உருளைகள் ஒவ்வொன்றாக வெடித்ததாலும் தீயை உடனடியாக அணைக்கமுடியாத சூழ்நிலை ஏற் பட்டது.

இந்த தீ விபத்தில் கடை ஊழி யர்கள் மற்றும் பொதுமக்கள் இடி பாடுகளில் சிக்கி காயமடைந்தனர். தீயணைப்புப் படையினர் அவர் களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக் குறிச்சி, விழுப்புரம், சேலம் உள் ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

எரிவாயு உருளைகள் தொடர்ந்து வெடித்ததால் இடிபாடுகளில் சிக் கியவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை. மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. மேலும் கட்ட டங்கள் இடிந்ததையடுத்து அந்த பகுதியில் 2 கி.மீ. தூரத்தில் போக்கு வரத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்த தீ விபத்தில் சங்க ராபுரம் மேட்டுதெருவை சேர்ந்த சையத்காலித் (வயது 22), ஷாஆலம் (24), ஷேக்பஷீர் (40), எஸ்.வி. பாளையத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் அய்யாச்சாமி உள்பட 6 பேர் தீயில் கருகி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்தில் சங்கராபுரம் எஸ்.வி.பாளையத்தை சேர்ந்த தமிழ் படைப்பாளர் சங்க தலைவர் அரங்க செம்பியன் (வயது 65) என்பவரும் இறந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது.

பட்டாசு கடை உரிமையாளர் செல்வகணபதி, வானாபுரத்தை சேர்ந்த சஞ்சய் (வயது 18), கோவிந் தன் (வயது 29) உள்பட 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந் தனர். இடிபாடுகளில் பலர் சிக்கி இறந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் தொடர்ந்து பொக் லைன் எந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் சிறீதர், மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் ஜியாவுல்ஹக், வரு வாய்த்துறை கோட்டாட்சியர் (பொறுப்பு) சரவணன், வட்டாட் சியர் பாண்டியன் ஆகியோர் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி னர். அதில் பட்டாசுகடை உரிமை யாளரான செல்வகணபதி பட்டாசு விற்பனை செய்வதற்கான உரிமத்தை இந்த ஆண்டு புதுப்பிக்கவில்லை என்பது தெரியவந்தது.

அமைச்சர் ..வேலு, சட்ட மன்ற உறுப்பினர்கள் தா.உதயசூரி யன், வசந்தம் கார்த்திகேயன் ஆகி யோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந் தித்து ஆறுதல் கூறினர்.

No comments:

Post a Comment