மாற்றம்
கோவை சிறப்பு ரயில்கள் உள் பட 24 ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை - ராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் (06655) மானாமதுரை சந்திப்பை இரவு 7.10 மணிக்கும், ராமநாதபுரத்தை இரவு 8.08 மணிக்கும், பாம்பனை இரவு 9.09 மணிக்கும் வந்தடையும்.
விண்ணப்பிக்க...
நர்சிங், பி.பார்ம், ரேடியோ கிராஃபி உள்ளிட்ட 19 வகையான மருத்துவத் துணை படிப்புகளுக்கு நவம்பர் 8ஆம் தேதி வரை விண் ணப்பிக்கலாம் என மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் கூறியுள்ளார்.
மீண்டும்
‘துக்ளக்‘ ஆசிரியர் குருமூர்த்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என அரசு வழக் குரைஞர் தெரிவித்துள்ளார்.
கட்டாயம்
இந்தியாவில் டிசம்பர் இறுதிக்குள் அனைவருக்கும் கரோனா நோய் தடுப்பிற் கான தடுப்பூசி முதல் டோஸ் கட்டாயம் போடப் பட்டிருக்க வேண்டும் என மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மானியம்
சுயதொழில் செய்து முன்னேற்றம் அடையும் வகையில் 100 பழங்குடியின பயனாளிகளுக்கு தலா ரூ. 50,000 வீதம் ரூ. 50 இலட்சம் செலவில் மானியம் வழங்குவது தொடர்பாக அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
சிறப்பு
அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் திருப்பூர் மாவட்டத்தில், 4,686 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.
அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பச்சை மரங்கள் மற்றும் இரும்பு கிரில்களில் அலங் கார சீரியல் விளக்குகளை கட் டுவதை தவிர்க்க வேண்டும் என்று மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உத்தரவிட்டுள்ளது.
எச்சரிக்கை
ரயிலில் பயணிகளிடம் கட்டாய வசூலில் ஈடுபடும் மூன்றாம் பாலினத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment