கருநாடகாவில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

கருநாடகாவில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை

சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு,அக்.28- விஜயாப் புரா மாவட்டம் சிந்தகியில் நேற்று (27.10.2021) காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச் சாரம் செய்த எதிர்க்கட்சித் தலை வர் சித்தராமையா பேசியதாவது:-

நான் முதலமைச்சராக இருந்த போது தாழ்த்தப்பட்ட  மற்றும் பழங்குடியின சமுதாய மக்களுக்கு ஏராளமான நிதியை ஒதுக்கீடு செய்திருந்தேன். ஏழை மக்களுக்கு இலவசமாக 10 கிலோ அரிசி வழங்கினேன். அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சிக்கும் நிதி ஒதுக்கினேன். மாநிலத்தில் பா.ஜனதா ஆட் சிக்கு வந்தபின்பு எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெற வில்லை. காங்கிரஸ் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட  மற்றும் பழங் குடியின சமுதாயங்களுக்கு எத் தனை கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டது, பா.ஜனதா ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை யால் சொல்ல முடி யுமா?.

இந்த விவகாரம் பற்றி ஒரே மேடையில் என்னுடன் விவாதம் நடத்த பசவராஜ் பொம்மை தயாரா?. ஜனதாதளம் (எஸ்) கட்சி மதசார்பற்றது என்று சொல்கிறார்கள். இடைத் தேர் தலில் காங்கிரசை தோற்கடிக்க பா.ஜனதாவுடன் கைகோர்த்து, 2 தொகுதிகளிலும் முஸ்லிம் வேட்பாளர்களை ஜனதாதளம் (எஸ்) கட்சி நிறுத்தி உள்ளது. இவ்வாறு கைகோர்த்து செயல் படுவதன் மூலம் பா.ஜனதாவுக் கும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக் கும் எந்த வேறுபாடும் இல்லை.”

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

No comments:

Post a Comment