வருங்கால வைப்புநிதி வட்டி 8.5 சதவீதம் - ஒன்றிய அரசு ஒப்புதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 30, 2021

வருங்கால வைப்புநிதி வட்டி 8.5 சதவீதம் - ஒன்றிய அரசு ஒப்புதல்

புதுடில்லி, அக்.30 வருங் கால வைப்புநிதி 8.5 சதவீத வட்டி விகி தத்துக்கு ஒன்றிய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித் துள்ளது.

கடந்த 2019 - 2020 நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான (பி.எப்.) வட்டி விகிதம் 8.65 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளில் இதுதான் மிகக்குறைவு ஆகும்.

கடந்த 2020-2021 நிதியாண்டுக்கு இதே வட்டி விகிதத்தை தொடருவது என்று கடந்த மார்ச் மாதம் நடந்த வைப்புநிதி அமைப்பின் உயரிய அமைப்பான ஒன்றிய அறங்காவலர்கள் வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், 8.5 சதவீத வட்டி விகிதத்துக்கு ஒன்றிய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதனால், வைப்புநிதி அமைப்பில் உள்ள 5 கோடிக்கு மேற்பட்ட சந்தாதாரர்களின் கணக்குகளில் இந்த வட்டி வரவு வைக்கப்படும்.   

ஜன்தன் வங்கி கணக்குகளின் எண்ணிக்கை  44 கோடியாக உயர்வு

புதுடில்லி, அக்.30 ஜன்தன் வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 44 கோடியாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நாட்டு மக்கள் அனைவரும் வங்கி சேவையை பயன்படுத்தும் வகையில் வங்கி கணக்குகள் தொடங்கும் திட்டம் ஒன்றை பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து ஆகஸ்டு 28ஆம்தேதி இது தொடங்கப்பட்டது.

பிரதம அமைச்சர் ஜன்தன் யோஜனா என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் வங்கி கணக்கு தொடங்கி பராமரித்து வருகின்றனர். தொடர்ந்து புதிய கணக்குகள் தொடங்கப்பட்டு வருவதால் இந்த கணக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் இந்த மாதம் வரை மொத்தம் 44 கோடி வங்கி கணக்குகள் இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டு இருப்பதாக பொருளாதார விவகாரங்கள் துறை பொருளாதார ஆலோசகர் மனிஷா சென்சர்மா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment