மன்னார்குடி, அக். 11- மன்னார் குடி கழக மாவட்டத்தின் சார்பில், மேலத் தஞ்சை மாவட்ட மேனாள் தலை வர் சுயமரியாதைச் சுட ரொளி மன்னை ஆர்.பி. சாரங்கன் அவர்களின் 26ஆம் ஆண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி மன் னார்குடியில், ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
பெரியார் பெருந் தொண்டர், சுயமரியா தைச் சுடரொளி, மேலத் தஞ்சை மாவட்ட திரா விடர் கழக முன்னாள் தலைவர் ஆர்.பி.எஸ் .என அழைக்கப்பட்ட ஆர்.பி.சாரங்கன் அவர்க ளின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் 10.10.2021 ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
மன்னார்குடி மேல ராஜவீதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு, திரா விடர் கழக நகரத் தலை வர் எஸ்.என். உத்திராபதி தலைமையில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
பின்னர், இருச்சக்கர வாகனங்களில் நகரின் பிரதான சாலைகளின் வழியாக ஊர்வலமாக வந்து ரயில் நிலையம் அருகே பாமணியில் உள்ள ஆர்.பி.சாரங்கன் அவர்களின் நினைவிடம் வந்தனர்.
அங்கு, நகரச் செயலா ளர் மு.இராமதாசு தலை மையில், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வை.கவுதமன், மன்னை ஒன்றிய கழகத் தலைவர் மு.தமிழ்ச்செல்வம் ஆகி யோர் முன்னிலையில் ஆர்.பி.எஸ்.நினைவு இடத்தில் மாலை வைத்து வீர வணக்கம் செலுத்தப் பட்டது.
இதில், மன்னார்குடி கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மன்னை ஒன்றிய தி.க. செயலாளர் கா.செல்வ ராசு, ஒன்றிய அமைப்பா ளர் ந.இன்பக் கடல், கழகப் பேச்சாளர் வழக் குரைஞர் சு.சிங்காரவேலு, கழக வழக்குரைஞர் எஸ். உதயகுமார், நகர துணைத் தலைவர் வெ.அழகேசன், நகர அமைப்பாளர் மு.சந் திரபோஸ், நகர இளைஞ ரணி செயலாளர் மா.மணிகண்டன், பகுத்தறி வாளர் கழக நகரத் தலைவர் கோவி.அழகிரி, பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் இரா.கோபால், ஆசிரியர் காமராஜ், கழகத் தோழர்கள் வி.செல்வம், ஜெ.சம்பத், ஒய்வு ஆசிரியர் கண்ணன், ஓட்டுநர் ரமேஷ், மன்னை சித்து, கழக ஆர்வலர்கள் பாமணி பழ.முருகராசு, எம்.துரை, நாதன் சேகர் உள்ளிட்டோர் இந்நிகழ் வில் கலந்து கொண்ட னர்.
No comments:
Post a Comment