ஊழல் வழக்குகளில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்த பரிந்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 5, 2021

ஊழல் வழக்குகளில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்த பரிந்துரை

சென்னை, அக்.5  போக்சோ மற்றும் ஊழல் வழக்குகளில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பிழைப்பூதியம் வழங்குவதை நிறுத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஊழல் தடுப்பு நடவடிக்கையில் சிக்கிய ஊழியர்கள் குறித்து பேரூராட் சிகள் ஆணையரிடமும், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆசிரியர்கள், ஊழியர்கள் குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரிடமும் ஆர்.பெரியசாமி என்பவர் தகவல் அறியும் உரிமை சட் டத்தின் கீழ் விளக்கம் கேட்டார். அதற்கு சரியான பதில்கள் அளிக்கப் படாததால், மாநில தகவல் ஆணையத் தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் விசாரித் தார். பின்னர் அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பேரூராட்சிகள் ஆணையத்தின் பொது தகவல் அதிகாரி அளித்த தகவலில், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் பேரூராட்சிகளில் 42 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதர குற்றங்களுக்காக 60 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றங்களுக்காக 232 ஆசி ரியர்கள், ஊழியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளன என்று பள்ளிக் கல்வி துறை பொது தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

லஞ்ச வழக்குகளிலும், போக்சோ வழக்குகளிலும் சிக்கும் அரசு ஊழி யர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படும் போது, முதல் 90 நாள்களுக்கு 50 சதவீதம் ஊதியம் பிழைப்பூதியம் என்ற பெயரில் அவர்களுக்கு வழங்கப் படுகிறது. அந்த தொகை 90-இல் இருந்து 180 நாள்கள் வரை 75 சதவீதமும், 180 நாள்களுக்குப் பிறகு முழு ஊதியமும் வழங்கப்படுகிறது.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் 6 ஆண்டுகள் பிழைப்பூதியம் என்ற பெயரில் முழு ஊதியத்தை வாங்கியுள் ளார். அதன் பிறகு அவருக்கு போக்சோ நீதிமன்றம் 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

போக்சோ மற்றும் லஞ்ச வழக்கு களில் நீதிமன்ற விசாரணையிலும், துறை ரீதியான விசாரணையிலும் காலதாமதம் ஏற்படுகிறது. அதனால், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழி யர்களுக்கு பிழைப்பூதியம் என்ற பெய ரில் முழு ஊதியம் வழங்குவதால், அர சுக்கு பெரும் நிதி சுமையை ஏற்படுத் துகிறது.

அரசு ஊழியர் என்ற நிலையில் அத்து மீறலில் ஈடுபட்டு, பணிக்காலத்தில் ஊழலில் திளைத்துவிட்டு, பணியிடை காலத்திலும் பணி செய்யாமல் ஊதியம் வாங்குவது, சமுதாயத்தில் அரசு ஊழி யர்கள் மீதான மதிப்பைக் கெடுக்கிறது. எனவே, ஊழல் குற்றச்சாட்டுகள் மற் றும் போக்சோ வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்களுக்கு பிழைப்பூதியம் வழங்கும் நடைமுறையை நிறுத்தும் வகையில், தமிழ்நாடு ஊதியம் மற்றும் பிழைப்பூதிய சட்டம் மற்றும் பணி தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழ் நாடு அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment