தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் பயின்று அய்அய்டி நுழைவுத் தேர்வில் வென்ற அருண்குமார் என்ற மாணவனின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னழகன்-பூவாத்தாள் ஆகியோரின் மகன் அருண்குமார், செவல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர். இவர், இந்த ஆண்டு அய்தராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (அய்அய்டி-அய்தராபாத்) பொறியியல் படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவர் அருண்குமாரை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (28-10-2021) நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்தினார். எளிய பின்புலத்திலிருந்து வந்து, அரசுப் பள்ளியில் படித்து இச்சாதனையை நிகழ்த்திய மாணவரைப் பாராட்டிய முதலமைச்சர், அவரது மேற்படிப்புக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என உறுதியளித்தார்.
Thursday, October 28, 2021
Home
தமிழ்நாடு
அய்அய்டியில் சேரும் அரசுப்பள்ளி மாணவனுக்கு பாராட்டு கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு
அய்அய்டியில் சேரும் அரசுப்பள்ளி மாணவனுக்கு பாராட்டு கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment