கராச்சி-, அக். 13- நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஷாஹித் ஜெக்ரி (வயது 35) என்ற பத்திரிகையா ளர், ஒரு தனியார் செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர், 10.10.2021 அன்று பலுசிஸ்தான் மாகாணத் தில் ஒரு வேலைக்காக நண்பருடன் காரில் பய ணித்தார்.அந்த காரை குறிவைத்து பயங்கரவாதி கள் சிலர் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காரில் இருந்த ஷாஹித் ஜெக்ரி யும், அவரது நண்பரும் படுகாயமடைந்தனர்.
பின், அவர்கள் இரு வரும் அருகிலுள்ள மருத் துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.எனி னும் பத்திரிகையாளர் ஷாஹித் மருத்துவம னைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட் டார். அவரது நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்த கொடூரமான தாக்குத லுக்கு 'பலுசிஸ்தான் லிப ரேஷன் ஆர்மி' என்ற தடை செய்யப்பட பயங்க ரவாத அமைப்பு பொறுப் பேற்றுள்ளது.
No comments:
Post a Comment