கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பிரேசில் அதிபர்!
கால்பந்தாட்ட மைதானத்தில் அனுமதி மறுப்பு
பிரேசிலியா, அக். 13- கரோனா வைரஸ் சாதாரண காய்ச் சல் போன்றதே என கூறி வரும் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ வைரஸ் பரவலை கட்டுப் படுத்த ஊரடங்கை அமல் படுத்துவது, தனிமைப் படுத்துதல் மற்றும் முகக் கவசம் அணிவது போன்ற தற்காப்பு நடவடிக்கைக ளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரு கிறார். அதே போல் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அவர் மறுத்து வருகிறார்.
இந்த நிலையில் பிரேசிலின் சா பாலோ நகரில் குடும்பத்தோடு விடு முறையை கொண்டாடி வரும் அதிபர் ஜெயீர் போல்சனரோ உள்நாட்டு அணிகளுக்கு இடையி லான கால்பந்து போட் டியை பார்ப்பதற்காக அங்குள்ள மைதானத் துக்கு சென்றார். ஆனால் மைதானத்தில் இருந்த அதிகாரிகள் ஜெயீர் போல்சனரோ கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்ப தால் அவரை மைதானத் துக்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் அவர் அங்கிருந்து கோபத் துடன் புறப்பட்டு சென்ற தாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘எதற்கு தடுப்பூசி சான்றிதழ். நான் கால்பந்து விளையாட்டை பார்க்க விரும்பினேன், அதற்கு தடுப்பூசி போட வேண்டும் என்று அவர் கள் சொன்னார்கள். அது ஏன்? தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை விட எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது’’ என கூறினார்.
No comments:
Post a Comment