பிஜீங், அக். 13- வடக்கு சீனா வின் ஹீபெய் மாகாணத் தில் பெய்த பலத்த மழை யால் சிஜியாஜுவாங் என்ற நகரத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. அந்த ஆற்றுப் பாலத்தைக் கடக்க முயன்ற ஒரு பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருந்த 51 பயணிகளில் 2 பேர் ஆற்றில் மூழ்கி உயிரி ழந்தனர். 37 பேரை மீட் புப் படையினர் மீட்டனர். 12 பேரை காணவில்லை.
அண்டை மாகாண மான சாங்சியில் பலத்த மழையால் ஆயிரக்கணக் கான வீடுகள் இடிந்து விழுந்தன. அப்பகுதியி லிருந்து 1.20 லட்சம் பேர் மீட்கப்பட்டனர். 1.90 லட்சம் எக்டேர் பயிர் கள் மழையால் சேதம டைந் துள்ளன. இந்த மாகாணத் தில் உள்ள பிங்யாவோ நகரத்தில் உலக பாரம் பரிய சின்னமாக அறிவிக் கப்பட்டுள்ள சுவர் உள் ளது. மழையால் அதில் 25 மீட்டர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment