பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப் போட்டி - பரிசு அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 7, 2021

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப் போட்டி - பரிசு அளிப்பு

வல்லம், அக்.7  பெரியார் சமுதாய வானொலி 90.4  மற்றும் மின்னணு வியல் மற்றும் தொலைத் தொடர்பியல் சார்பாக தந்தை பெரியார் அவர்களின் 143 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு  நடைப் பெற்ற பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா மற்றும்  உலக ஆசிரியர் தின விழா   05.10.2021 அன்று பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில்  சிறப்பு விருந்தி னராக மேக்ஸ்வல் மெட்ரிக்  மேல் நிலைப்  பள்ளி  முதல்வர் வரத ராஜன்    பல்வேறு பள்ளிகளில் இருந்து கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு  கருத்துகளை வழங்கி சிறப்பித்தார் மற்றும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய இயக்குநர் பேரா. நம்.சீனி வாசன் தலைமை உரையாற்றினார். 

பங்கு பெற்ற பள்ளி மாணவர் களுக்கு பதிவாளர் பி.கே .சிறீவித்யா  பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சி யின் அமைப்பாளர்  முனை வர்..நர்மதா, பெரியார் சமுதாய வானொலி ஒருங்கிணைத்தார்.

No comments:

Post a Comment