புதுடில்லி,அக்.7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று (6.10.2021) தமது டிவிட்டர் பதிவில்,
‘பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.100 ஆகவும், சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.900 ஆகவும் உள்ளது. இது மிகவும் கொடூரமானது. எனவே, பெட்ரோலிய பொருட்கள் மீதான ஒன்றிய கலால் வரிகளை மத்திய அரசு உடனே குறைக்க வேண்டும்.
அது மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிப்பதாக இருக்கும்’ என்று கூறியுள் ளார்.
No comments:
Post a Comment