அரசுக்கு அவமானம்: புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி, அக்.7 உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது புதுவை அரசுக்கு மிகப் பெரிய அவமானம் என நாரா யணசாமி கூறினார்.
புதுச்சேரி மேனாள் முதல மைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் கொலை
ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கடந்த ஓராண்டாக டில்லி-அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூர் பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட் டத்தில் ஒன்றிய அமைச்சர்அஜய்மிஸ் ராவின் மகன் தனது ஆதரவாளர் களுடன் வந்து வாகனத்தை கொண்டு ஏற்றி 4 விவசாயிகளை கொலை செய்துள்ளார்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து ஒன்றிய அமைச் சரின் மகன் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. இந்தநிலையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத் திற்கு ஆறுதல் கூறச்சென்ற பிரியங்கா காந்தியை காவல்துறையினர் கைது செய்தனர். விவசாயிகள் கொலையை உத்தரபிரதேச மாநில அரசு மறைக்க முயற்சிக்கிறது. சத் தீஸ்கர் முதலமைச்சர், பஞ்சாப் முதலமைச்சர் ஆகியோர் விவசாயிகளை சந்திக்க தடை விதிக்கப் பட்டது.
அரசுக்கு அவமானம்
புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டமாக தேர்தல் அறி விக்கப்பட்டது. இதில் வார்டுகள் பிரிப்பதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் புகார் அளித்த போது தேர்தல் ஆணையம் அலட்சியம் செய்தது. இந்த நிலையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை அறிவிப்பை திரும்பப் பெற உத்தரவிட்டது. இது புதுவை அரசுக்கு மிகப்பெரிய அவமானம்.
இதன்மூலம் புதுவை ஆளும் அரசுக்கு பின்னடைவு ஏற்பட் டுள்ளது. நகராட்சிகளுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட் டுள்ளது. புதிதாக இடஒதுக்கீட்டில் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தட்டிக் கேட்கும் உரிமை
தன்னிச்சையாக தேர்தல் ஆணையர் தேர்தலை அறிவிப்பதும், தவறு நடந்துவிட்டதாக கூறி தேர்தலை நிறுத்துவதும் புதுவை அரசுக்கு இழுக்கை ஏற்படுத்தி உள்ளது.
எனவே விதிமுறைகளுக் குட் பட்டு, விதிமுறைகளை கடைப் பிடித்து பொது தொகுதி, மழைவாழ் மக்கள், பிற்ப்படுத்த மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பெண் களுக்கு எவ்வளவு இடங்களை ஒதுக்குவது குறித்து சம்பந்தப்பட்ட வர்களை அழைத்து பேசி முதல மைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை அரசு அதிகாரிகள் விதிமுறைகளை பின் பற்றி செயல் படுகிறார்களா? என் பதை தட்டிக் கேட்கும் உரிமை அரசுக்கு உண்டு. அதனை முதல மைச்சர் ரங்கசாமி செய்ய தவறிவிட்டார். இனியாவது விதிமுறைப் படி நடவடிக்கை எடுத்து தேர்தலை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment