நியூயார்க், அக். 13- அய்.நா.சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை கடைப்பிடிக்குமாறு தலிபான்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தலிபான்கள் அவர்கள் அளித்த வாக்குறுதியை கடைப்பிடிக்க வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள செய்தியில், தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், முன்னாள் அரசு அலுவலகர்கள் உள்ளிட்ட ஆப்கன் குடிமக்களிடம் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர். அந்த வாக்குறுதிகளை கடைப்பிடிக்குமாறு தலிபான்களிடம் கடுமையாக வேண்டு கோள் விடுக்கிறேன்.
அவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், பன் னாட்டு மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டம் ஆகியவற்றின் கீழ் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.
லிபிய கடலோரம் ஒதுங்கிய 2 படகுகளில் 16 உடல்கள் கண்டெடுப்பு
திரிபோலி, அக். 13- அய்.நா.வுக் கான அகதிகள் தூதரகம் வெளி யிட்டுள்ள செய்தியில், திரி போலி கப்பல் படை தளத்திற்கு வந்த 2 படகுகளில் இருந்து 16 பேரின் உடல்கள் கண்டெடுக் கப்பட்டு உள்ளன.
இதுதவிர, உயிர்பிழைத்த 187 பேரை மீட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய ப்பட்டன. சிலருக்கு அவசர மருத்துவ உதவிகள் தேவைப்பட்ட நிலையில் அவை வழங்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.
நடப்பு ஆண்டில் பெண்கள், குழந்தைகள் உள்பட 26,314 சட்டவிரோத அகதிகள் மீட்கப்பட்டு, லிபியா நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். 474 பேர் உயிரிழந்து உள்ளனர். 689 பேரை காணவில்லை. இந்த நிலையில், லிபிய கடற்கரையில் 16 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment