இட ஒதுக்கீடு பிறப்புரிமை - பிச்சை அல்ல! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 13, 2021

இட ஒதுக்கீடு பிறப்புரிமை - பிச்சை அல்ல!

பா... அரசால் எல்லா உரிமைகளும் பறிக்கப்படுகிறது

கருநாடக பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு கண்டனம்

பெங்களுரு, அக். 13 கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பது அரசமைப்பு சட்டம் வழங் கியுள்ள பிறப்புரிமையே தவிர, யாரும் கொடுக்கும் பிச்சை அல்ல. அதைப் பறிக்கும் பாஜ அரசின் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று கரு நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு துணைத் தலைவர் என். மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தாழ்த்தப் பட்ட, பழங் குடியின மற் றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக் கீட்டை ரத்து செய்யும் சூழ்ச்சியை ஒன்றிய அரசு செய்து வருவதை தடுப்பது குறித்து பெங்களூரு சவுடையா நினைவு அரங் கில் 9.10.2021 அன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கருநாடக மாநிலபிற்படுத்தப்பட் டோர் கூட்டமைப்பு துணைத் தலைவர் என். மகாலிங்கம் பேசுகையில், 'நாடு சுதந்திரம் பெற்று ஜனநாயகம் மலர்ந்த பின், மக்களின் வாழ்வியல் உரிமைக்காக அரசியல மைப்பு சட்டம் உருவாக் கப்பட்டது. இதில் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சமூக நீதி ஆகிய வற்றில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மேம்பட வேண்டு 'மானால் இட ஒதுக்கீடு அவசியம் என்பதை சட் டத்தில் சேர்த்தனர்.

கடந்த 75 ஆண்டுக ளாக ஒடுக் கப்பட்ட மக்கள் இடஒதுக்கீட்டு உரிமை பயனை அனுபவித்து வரு கிறார்கள். ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைந்தபின், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வரு கிறது.

நல்ல லாபத்தில் இயங்கி வரும் தொழிற் சாலைகளை தனியாரி டம் ஒப்படைத்து வருகிறது. இதன் மூலம் இட ஒதுக்கீடு மறைமுகமாக பறிக்கப்பட்டு வருகிறது. தொழிற் சாலைகளில் மறைமுகமாக பறிக் கப்படும் இட ஒதுக்கீடு, ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்களிலும் இடஒதுக்கீட்டை பறிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அரசுத் துறையில் பணியாற்று வோருக்கு இடஒதுக்கீடு அடிப் படையில் பதவி உயர்வு வழங்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் முடி வால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பதவி உயர்வு சலுகை மற்றும் உரிமையை இழந்துள்ளனர்.

இட ஒதுக்கீடு பிறப்பு ரிமை, யாரும் பிச்சையாக கொடுப்பதல்ல. அதைப் பறிக்கும் ஒன்றிய அர சின் முடிவை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும்,

தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழு திய அனிதா என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவி 96 சதவீ தம் மதிப்பெண் பெற்றும் மருத்துவக் கல்வியில் சேர முடியாமல் தற் கொலை செய்து கொண்டார். இது போல் பல அனிதாக்கள் உள்ளனர்.

இட ஒதுக்கீடு உரிமையை சரியாக பயன்ப டுத்தி இருந்தால் அப்பாவியின் உயிர் பறிபோய் இருக்காது. அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையை பெறுவ தற்கு கூட நாம் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட் டுள்ளதை பார்க்கும் போது, நாட்டில் ஜனநாயகம் இருக் கிறதா? என்ற கேள்வி எழுகிறது என்றார்.

No comments:

Post a Comment