‘சிப்’ தட்டுப்பாட்டால் ‘மாருதி சுசூகி’ உற்பத்தி சரிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 13, 2021

‘சிப்’ தட்டுப்பாட்டால் ‘மாருதி சுசூகி’ உற்பத்தி சரிவு

புதுடில்லி, அக். 13- நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகிஅதன் செப்டம்பர் மாத உற்பத்தியில், இரு மடங்கு சரிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

செமிகண்டக்டர் சிப்களின் தட்டுப்பாடு காரணமாக, உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டிருப் பதாக மாருதி தெரிவித்துள்ளது.இது குறித்து மேலும் தெரிவிக்கப் பட்டு உள்ளதாவது:கடந்த ஆண்டு செப்டம்பரில், மொத்தம் 1.67 லட் சம் வாகனங்கள் தயாரிக்கப்பட்டி ருந்த நிலையில், கடந்த செப்டம் பரில் 81 ஆயிரத்து, 278 வாகனங்கள் மட்டுமே தயாரிக்க முடிந்துள்ளது. போதுமான அளவுக்கு மின்னணு சாதனங்கள் கிடைக்காத காரணத் தினால், உற்பத்தியை அதிகரிக்க இயலவில்லை. இவ்வாறு தெரிவிக் கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாத உற்பத்தி, வழக்கமான உற்பத்தியில் 40 சத வீதம் அளவுக்கே இருக்கும் என எதிர்பார்ப்பதாக கடந்த ஆகஸ்ட் மாத இறுதியிலேயே மாருதி தெரிவித்துஇருந்தது குறிப்பிடத்தக் கது. இந்நிறுவனத்தின் குருகான் மற் றும் மானேசர் ஆலையில், உற்பத் தித் திறன் ஆண்டுக்கு 15 லட்சம் வாகனங்கள் ஆகும்.

மேலும் மாருதிக்கு விநியோகம் செய்யும், ‘சுசூகி மோட்டார் குஜ ராத்ஆலையின் உற்பத்தி, ஆண் டுக்கு 7.5 லட்சம் ஆகும்.தற்போது உலகெங்கிலும் தயாரிக்கப்படும் வாகனங்களில், அதிகளவிலான நவீன தொழில்நுட்ப வசதிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மின்னணு சாதன தயாரிப்பில் முக்கிய பங்காற் றும், ‘சிப்தயாரிப்பில் தட்டுப்பாடு ஏற் பட்டிருப்பது, உலகெங்கிலும் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங் களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment