டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கல்வித் துறையை நிருவகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தி யும், அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டுமெனக் கோரியும், 12 மாநில முதலமைச்சர் களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
· உ.பி. லக்கிம்பூரில் நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் வந்த கார் மோதியதில் 2 விவ சாயிகள் பலி. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் 9 பேர் மரணம். விவசாயிகளுக்கு ஆறுதல் கூற சென்ற எதிர்க் கட்சித்தலைவர்கள் கைது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
· உச்சநீதிமன்றத்தில், ஒன்றிய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கான நீட் தேர்வு பாடத் திட்டத்தில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்களை தயார் செய்வதற்காக ஜனவரி 10, 11ஆம் தேதிகளுக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment