'நீட்' தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் - ஏன்? - கும்பகோணத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 4, 2021

'நீட்' தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் - ஏன்? - கும்பகோணத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற கருத்தரங்கம்

கும்பகோணம், அக்.4 3.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் கும்பகோணம் ராயாஸ் அனுக்கிரஹா மகாலில் திராவிடர் கழகத்தின் சார்பில் 'நீட்' தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் - ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கில் "கற்போம் பெரியாரியம்" மற்றும் "ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை" ஆகிய நூல்கள் அறிமுக விழாவும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை கும்பகோணம் கழக மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை  துரை ராஜ் வரவேற்று உரையாற்றினார். இந்நிகழ்விற்கு கும்பகோணம் மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் இர.கு. நிம்மதி தலைமையேற்று உரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன், கழகக் காப்பாளர் ஜெயராமன், தஞ்சை மண்டல தலைவர் அய்யனார், மண்டல செயலாளர் குருசாமி, பொதுக் குழு உறுப்பினர் வை. இளங்கோவன், குடந்தை மாவட்ட .. தலைவர் ஆடிட்டர் சண்முகம், பெருநகர தலைவர் கவுதமன், செயலாளர் வழக்குரைஞர் பீ. இரமேஷ், குடந்தை ஒன்றிய தலைவர் ஜில்ராஜ், ஒன்றிய செயலாளர் கோவி. மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு 'நீட்' தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் - ஏன்? எதற்காக? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

'கற்போம் பெரியாரியம்' எனும் நூலை அறிமுகப்படுத்தி பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத் தலைவர் நம். சீனிவாசன், "ஆர்.எஸ்.எஸ்.  என்னும் டிரோஜன் குதிரை" என்ற நூலை அறிமுகப்படுத்தி கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர். இவ்விரு நூல்களை யும், தி.மு.. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சு. கல்யாணசுந் தரம் வெளியிட்டு உரையாற்றினார். மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ. இராமலிங்கம், அரசு தலைமை கொறடா கோவி. செழியன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை . அன்பழகன் ஆகியோர் நூல்களைப் பெற்றுக் கொண்டு உரை யாற்றினார்கள்.

இந்நிகழ்வில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர்.லோகநாதன், தஞ்சை வடக்கு மாவட்ட சிபிஅய் செயலாளர் மு..பாரதி, தஞ்சை விசிக மண்டல செயலாளர் சா.விவேகானந்தன், தஞ்சை சிபிஅய்(எம்) மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், தஞ்சை வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் இரா.முருகன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில செயலாளர் ஆடுதுறை ஏஎம்.ஷாஜஹான், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், நீலப்புலிகள் கட்சித் தலைவர் .இளங்கோவன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிஏஎஸ் ரஹமத் அலி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் .செல்வம், குடந்தை திமுக பெருநகர செயலாளர் சு..தமிழழகன் கலந்து கொண்டு நூல்களைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினர். நிகழ்வில் மே 17 இயக்க ஒருங்கி ணைப்பாளர் திருமுருகன் காந்தி, பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு நாகை.திருவள்ளுவன் ஆகி யோர் கலந்து கொண்டு நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

மேலும், குடந்தை மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தன், துணை செயலாளர் தமிழ்மணி, மாவட்ட மகளிரணி தலைவர் ஜெயமணிகுமார், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் திரிபுரசுந்தரி, மாவட்ட .. பொறுப்பாளர்கள் தி.இராசப்பா, சு.திருஞானசம்பந்தம், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், பாபநாசம் ஒன்றிய கழக தலைவர் தங்க.பூவானந்தம், ஒன்றிய செயலாளர் சு.கலியமூர்த்தி, வலங்கைமான் ஒன்றிய தலைவர் சந்திரசேகரன், செயலாளர் பவானி சங்கர், திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசன், ஒன்றிய செயலாளர்கள் முருகானந்தம், சங்கர், திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் மோகன், துகிலி தமிழ்மணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் லெனின், பாஸ்கர், இளைஞரணி துணை தலைவர் பெரியார் தினேஷ் மற்றும் அனைத்துக் கட்சித் தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

இறுதியாக குடந்தை மாவட்ட இளைஞரணி தலைவர் பொறியாளர் .சிவக்குமார் நன்றி கூறினர்.

No comments:

Post a Comment